Homeசெய்திகள்கட்டுரைஒரே இரவில் சர்வேயா? வசமாக சிக்கிய விஜய்! 

ஒரே இரவில் சர்வேயா? வசமாக சிக்கிய விஜய்! 

-

- Advertisement -

தமிழ்நாட்டில் முறையான அரசியல் கட்சியையோ, கட்டமைப்போ வைத்திருக்காத விஜய் அடுத்த முதல்வருக்கான போட்டியில் அதிமுகவை விட முன்னிலை வகிப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி தெரிவித்துள்ளார்.

சி-ஓட்டர் நிறுவன கருத்துக்கணிப்பு தொடர்பாக ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சி-ஓட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டியில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27 சதவீதம் வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். தவெக தலைவர் விஜய் 18 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார். எடப்பாடி பழனிசாமி 10 சதவீத வாக்குகளுடன் 3-வது இடத்திலும், 9 சதவீத வாக்குகளுடன் அண்ணாமலை 4வது இடத்திலும் உள்ளனர். இதுபோன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகள் என்பது தற்போது இருக்கும் அரசியல் சூழலை பொருத்து எடுக்கக்கூடியவை ஆகும். இதில் நேற்றுதான் விஜய் சொன்னார், இனிமேல் தவெகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி என்று. நேற்று இரவே சிஓட்டர் கருத்துக்கணிப்பை வெளியிட்டு விட்டனர்.

ஒரு விஷயத்தை செய்வதென்றால் அதை மாட்டிக்கொள்ளாமல் செய்வது என்பது ஒரு கலையாகும். ஆதவ் அர்ஜுனாவுக்கு அந்த கலை தெரியவில்லை. விசிகவில் இருக்கும்போது அப்படிதான். விசிகவை, திமுக கூட்டணியில் இருந்து வெளியே கொண்டு வருவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். ஒரு அரசியல் வியூக வகுப்பாளராக உள்ளுக்குள் இருந்துகொண்டு அதை சாத்தியப்படுத்தி இருக்க வேண்டும். மாறாக அந்த அஜெண்டாவை செய்துமுடிக்க முடியாமல், ஆதவ் அர்ஜுனாதான்  தெரித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்றைய தவெக பொதுக்குழுவில் களத்திற்கே செல்லாமல் 20 சதவீத வாக்குகள் வந்துவிட்டது என்று ஆதவ் சொன்னார். விஜய் தவெகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி என்றார். இரவோடு இரவாக சி-ஓட்டர் இப்படி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

அப்படி விஜய் என்ன அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதை வைத்து, அவர்கள் எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆன்லைனில் சர்வே நடத்தினார்களா என்று தெரியவில்லை. அப்படி ஆன்லைனில் நடத்தப்பட்டிருந்தால் சீமானுக்கு 130 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கும். இதில் பேசப்பட்டிருக்க கூடிய நபர்களுக்கு பினனால் இருக்கக்கூடிய அரசியல் சூழல் பற்றி பார்ப்போமானால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சினைகள் அனைத்தையும் முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இன்றைக்கு கூட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. பல இடங்களில் மக்களுக்கு 5 மாதம் வரை சம்பளம் நிலுவையாக இருக்கிறது. இது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் நேரடியாக கை வைக்கக் கூடிய வேலையாகும். கிராமப் புறங்களில் கூலி வேலைக்கு செல்பவர்கள் யார் என்றால்? சாதி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பின்தங்கியவர்கள் தான். 100 நாள் வேலைத்திட்டம் வருகிறபோது யாரோ ஒரு முதலாளியிடம் வேலை பார்ப்பதை விட கவுரவமாக அரசாங்கம் கொடுக்கும் இந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு வேலைக்கு போகலாம் என்று போகிறார்கள்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

இந்த திட்டத்தை கொண்டுவந்தது காங்கிரசாக இருக்கலாம். ஆனால் இந்த திட்டத்தை கொண்டுவருவதற்கு முக்கியமாக முனைப்பு காட்டியவர் சோனியா காந்தி ஆவார். சோனியா காந்தி, சி.பி.எம் கட்சியுடன் பேசி கொண்டு வந்த திட்டம் தான் இது. இந்த திட்டத்தை இன்றைக்கு கெடுக்க முயற்சிக்கிறார்கள். காசு கொடுப்பது பிரச்சினை இல்லை. அதை தாண்டி மறுபடியும் இந்த மக்கள் எல்லாம் பண்ணையார்களுக்கு கீழே அடிமைகளாக போக வேண்டும். வர்க்க நிலையில் இவர்கள் வளர்ந்துவிடக்கூடாது. 100 நாள் தொடர்ச்சியாக வேலை கிடைத்துவிட்டால் ஊர்களில் இருக்கக்கூடிய பண்ணையார்கள் எல்லாம் என்ன செய்வார்கள் என்கிற சாதிய மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறதா? என்கிற அளவுக்கு இதற்குள் சிக்கல் இருக்கிறது.  அதை முன்வைத்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராடி கொண்டிருக்கிறார். அந்த மக்களிடம் கேளுங்கள் யாரை அடுத்த முதலமைச்சர் ஆக தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று. அவர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு கேட்கப்படவில்லை.

edappadi palanisamy

இன்றைக்கும் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கட்சி கட்டமைப்பை வைத்திருக்கக்கூடிய இயக்கம் அதிமுக. அந்த கட்சியில் இருக்கக்கூடிய தொண்டர்களின் எண்ணிக்கையே மிகப்பெரிய பலம் அவர்களுக்கு. அதனால்தான் ஜெயலலிதா மறைக்கு பின்னர் அதிமுக காணாமல் போய்விடும் என்று சொல்லப்பட்டபோதும் கூட கிட்டத்தட்ட 3-4 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை இழக்கின்ற அளவுக்கு தன்னை நிலை நிறுத்திக்கொண்டது என்பதை பார்க்க வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் அவர்கள் தான் தமிழ்நாட்டில் பெரிய கட்சி. ஆனால் தேய்மானத்தை நோக்கி அவர்களே தங்களை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தபடியாக அண்ணாமலை. பாஜக மாநில தலைவராக உள்ளார். 2 முறை தேர்தல்களில் போட்டியிட்டார். எந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டில் எந்த வித முன்னேற்றத்தையும் அந்த கட்சியால் காட்ட முடியாத அளவுக்கு,  இப்போதும் காணாமல் போன ஒரு கட்சியாகத்தான் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த பட்டியலில் விஜய் உள்ளுக்குள்ளேயே கிடையாது. அவரிடம் கட்சியும் கிடையாது. கட்டமைப்பும் கிடையாது. கொள்கையும் கிடையாது. வேலைக்கும் இன்றும் வரவில்லை. பரந்தூருக்கு ஒரே ஒருமுறை வந்து சென்றிருக்கிறார். அதுவும் சுற்றுலா செல்வதை போன்று சென்றுவந்ர். அதை தவிர வேறு எந்த வேலையும் அவர் செய்யவில்லை.

இதை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்கள் 27 சதவீதம் மு.க.ஸ்டாலின் என்றும், 18 சதவீதம் விஜய் என்றும் சொல்லுகிறார்கள் என்கிற இந்த கம்பி கட்டும் கதையை ஆதவ் அர்ஜுனா வேண்டுமென்றால் சொல்லிக்கொள்ளலாம். பாஜக சொல்ல நினைப்பதை அவர்களால் சொல்ல முடியாததால்தான் விஜய் வருகிறார். அப்படி வருகிற விஜயும் சொல்ல முடியாத சில விஷயங்கள் இருக்கிறது. அதை ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். அதை அவரே சொன்னால் உலகம் நம்பாது என்பதால், சி-ஓட்டர் மூலம் சொல்ல வைத்திருக்கிறாரா? என்கிற சந்தேகம் வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்

MUST READ