spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசாட்டைய எடுங்க ஸ்டாலின்! முர்மு ராஜினாமாவுக்கு  ரெடியா?

சாட்டைய எடுங்க ஸ்டாலின்! முர்மு ராஜினாமாவுக்கு  ரெடியா?

-

- Advertisement -

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் உச்ச நீதின்றத்தின் பின்னால் நிற்கவேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாநில அரசின் பொறுப்பு என்று அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்த விவகாத்தில் குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியுள்ளது தொடர்பாக அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சட்ட மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு கால அவகாசம் விதித்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்குவது குறித்து கேள்வி எழுப்பி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடிதம் எழுதியுள்ளார்.  இது அரசியலமைப்பு சட்டத்தை மீறி நடக்கக்கூடிய மத்திய அரசின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவர் செயல்படுகிறார் என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. மத்திய அரசின் எண்ணம் தான் ஜனாதிபதி மூலமாக வெளிப்படுகிறது. அரசியலமைப்பு சட்டமே காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என்று எப்படி ஜனாதிபதி சொல்ல முடியும். ஆஸ் சூன் அஸ் பாசிபிள் என்றால், காலக்கெடுதானே. மசோதாக்கள் வந்த உடனே கையெத்து போடுகிற வேலையை முர்மு செய்கிறார். 370வது சட்டப்பிரிவு, வக்பு வாரிய சட்டத்திருத்தங்களுக்கு வந்த உடனேயே கைழுத்து போட்டார். அரசியலமைப்பு சட்டம் முடிவு எடுக்கிற இடத்தில் உள்ள குடியரசுத் தலைவருக்கு ஒரு லீனியன்சி கொடுக்கிறார்கள். அரசின் கட்டமைப்பில் ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் போன்றவர்களுக்கு ஒரு வரைமுறை உள்ளது. அதை புரிந்துகொண்டு நடப்பதற்காக தான் அவர்களுக்கு காலக்கெடுவே வழங்கப்படுகிறது.

வினேஷ் போகத்தின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது : குடியரசுத் தலைவர் முர்மு

ஆஸ் சூன் அஸ் பாசிபிள் என்பதை, ஆஸ் லேட் அஸ் பாசிபிள் என்று தவறாக புரிந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் நிறைவேற்றுகிற மசோதாக்களை வரைமுறை இன்றி கிடப்பில் போடுகிறார்கள். இந்த விவகாரத்தில் ஜனாதிபதிக்கு எதிராகவே உரிமை மீறல் பிரச்சினையை கொண்டுவரலாம். ஏன் என்றால் ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு எதிராக செய்துள்ளார். அதனை கேள்வியே கேட்காமல் இருந்த ஜனாதிபதி என்றால், திரவுபதி முர்முதான். மாநில அரசு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், ஒன்று கையெழுத்து போட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைக்கலாம். ஆனால் அப்படி எல்லா மசோதாக்களையும் அனுப்ப முடியாது. மூன்றாவது நாட்டின் ஒற்றுமையை கேள்வி எழுப்புகிறவிதமாக, நாட்டின் இறையாண்மையை கேள்வி எழுப்புகிற மாதிரி இருந்தால், அனுப்பலாம். இறுதி வாய்ப்பு என்ன என்றால் மசோதாவை மீண்டும் மாநில அரசுக்கு அனுப்பி, மறுபரிசீலனை செய்ய சொல்லி ஆலோசனை வழங்கலாம். அதை  ஏற்பதும், ஏற்காததும் அந்த மாநில அரசின் விருப்பமாகும். மீண்டும் அந்த சட்டத்தை நிறைவேற்றி அனுப்பினால், அரசியலமைப்பு சட்டத்தின் படி கையெழுத்து போடுவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை.

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த மசோதவை ஜனாதிபதிக்கு அனுப்பினால் அவருக்கு அரசியலமைப்பு சட்டம் தெரியுமா? இல்லையா? ஆளுநர் செய்தது என்று சொல்லி அவருக்கே திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். அல்லது மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி இருக்க வேண்டும். அதை செய்ய தவறியதன் காரணமாகவே  சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி, தற்போதுள்ள சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி தவறாக செயல்பட்டால் சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதமன்றம் தீர்ப்பு வழங்கலாம் என்பது அரசியலமைப்பு சட்டம் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கி இருக்கும் உரிமையாகும். அந்த உரிமையில் சொல்வது, அது ஜனாதிபதி, ஆளுநர் உள்ளிட்ட அரசாங்கத்தை கட்டுப்படுத்துகிறது. தவறு செய்ததை திருத்தக்கூடிய முடியாத ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இருக்கிறார். அவர்கள் கேட்ட கேள்வியே தவறானதாகும். எனவே ஆர்.என்.ரவி செய்ததற்கு நீங்கள் கேட்டது தவறு என்று ஜனாதிபதியை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி கேட்டால், அவர் ராஜினாமா செய்துவிட்டு ஓட வேண்டும்.

மத்திய அரசிடம் இருந்து வரும் மசோதாக்களை படிக்காமலே கையெழுத்து போடுகிறீர்கள். அதே அரசியல் சாசனத்தை மீறி ஒரு ஆளுநர் நடக்கிறார் என்றால் உங்கள் அலுவலகத்தில் அதிகாரி எங்கே போனார். நான் ஒப்புதல் அளிக்காவிட்டால் அந்த மசோதா செத்துவிட்டது என்று அர்த்தம். அதை நீங்களாகவே புரிந்து கொள்ளுங்கள் என்று ஆர்.என்.ரவி சொல்கிறார். இது அரசியல் சாசனத்தை மீறிய செயலா? இல்லையா? ஜனாதிபதி அலுவலகம் சட்டத்தை மீறி நடந்து கொண்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள். அரசியலமைப்பை சட்டத்தை மீறி செயல்படுவதற்கு குடியரசுத் தலைவராக இருந்தாலும் அதிகாரம் கிடையாது. இந்த கேள்வியை கேட்டு தற்போது உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி முர்முவை மாட்டிவிட்டு உள்ளது. அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது?

இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் தலையிடுவதாக சொல்வது தவறாகும். இந்த பிரச்சினையை ஏற்படுத்துவது ஆளுநர் ஆர். என்.ரவிதான். அப்படி பட்ட ஆளுநரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டுமா? அல்லவா? அரசியல் சாசன சட்டத்தை நீங்கள் கால்களில் போட்டு மிதித்தீர்கள் என்றால் அதை கேள்வி கேட்கிற இடத்தில்தான் உச்சநீதிமன்றம் உள்ளது. சட்டத்தை இயற்றுகிற அதிகாரம் தான் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. அந்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்குள் இருக்கிறதா? கேள்வி கேட்கிற உரிமை உச்சநீதிமன்றத்திற்கு இருக்கிறது. அப்போது அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

நம்ம முதலமைச்சர் பெருந்தன்மையோடு சட்ட மசோதவை நிறைவேற்றி உள்ளார். நான் முன்பே இவர்கள் மீது பெருந்தன்மை காட்ட வேண்டாம் என்று சொன்னனேன். முதலமைச்சர்தான் வேந்தர் என்று ஒரு வார்த்தை போட்டிருந்தால் முடிந்து இருக்கும். ஒரு சில இடங்களில் அந்த வார்த்தை இல்லை. அப்போது, அதை ஆளுநர் தவறாக பொருள் கொள்வார்கள்.தற்போது சிறப்பு கூட்டத்தை கூட்டி மேலும் 10 மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பி விடுவோம். 3 மாதங்களில் அதற்கு ஒப்புதல் அளித்துதான்ஆக வேண்டும். ஒரு மாநில முதல்வர் பெருந்தன்மையோடு நடந்துகொண்டதை , அதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தினால்,, அந்த பெருந்தன்மையை காட்டக்கூடாது என்பதை தமிழக முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்.

“இது இன்பத் தமிழ்நாடு! இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கக்கூடிய மத்திய அரசாக உள்ளது. அதற்கு ஒத்து ஊதக்கூடியவராக ஜனாதிபதி உள்ளார்.அவர்களுக்கு ஏவகம் செய்யக்கூடிய ஏவலாளியாக ஆளுநர் உள்ளார். இப்படிபட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் குரலை நெரித்து, மக்களாட்சி செயல்பட கூடியவர்களாக இருப்பார்கள். இந்த விவகாரத்தில் உச்ச நீதின்றத்தின் பின்னால் நிற்கவேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாநில அரசின் பொறுப்புமாகும். காங்கிரஸ் அரசு இதே வேளை செய்தால் பாஜக ஆளூம் மாநில அரசுகள் எதிர்க்கும். இது மாநில சுயாட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவலாகும். எனவே அனைத்து மாநில முதலமைச்சர்களும் மு.க.ஸ்டாலின் கொடுத்த அழைப்பை ஏற்று உச்சநீதிமன்றத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

MUST READ