Homeசெய்திகள்கட்டுரைதமிழ்நாடு பட்ஜெட்! கதறும் சங்கிகள்! சம்பவம் செய்த ஸ்டாலின்!

தமிழ்நாடு பட்ஜெட்! கதறும் சங்கிகள்! சம்பவம் செய்த ஸ்டாலின்!

-

- Advertisement -

தமிழக பட்ஜெட்டில் ரூ என்று ஏன் தமிழில் மாற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பும் தமிழிசை சவுந்தரராஜன் இதே கோபாத்தோடு மத்திய அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியை பெற்றுத்தருவாரா? என்று பத்திரிகையாளர் செந்தில்வேல்  கேள்வி எழுப்பியுள்ளார்.

senthilvel new
senthilvel new

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்த எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன், பாஜகவினர் ஊடக விவாதங்களில் தமிழ்நாசு அரசு கடன் வாங்குவதாக கூப்பாடு போடுகிறார்கள். நாடு சுதந்திரம் பெற்றது முதல் மன்மோகன் சிங் ஆட்சிக்காலம் வரையிலான 67 ஆண்டுகளில் மத்திய அரசு பெற்ற கடன்தொகை என்பது ரூ.55 லட்சம் கோடி ஆகும். மோடி பிரதமராகிய இந்த 10 வருடங்களில் மட்டும் அவர் வாங்கியுள்ள கடன் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.200 லட்சம் கோடிகளை தாண்டிவிட்டது.

தமிழ்நாடு கடன் வாங்குகிறது என்று குற்றம் சாட்டுகிறார்களே, தமிழக அரசு அந்த கடன் தொகையை தங்கள் வீட்டிற்கு ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை. கடன் பெற்று மகளிர் உரிமைத் தொகையை கொடுக்கிறது. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் புதுமைப் பெண், கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டங்களை கொடுக்கிறது. ஆவின் பால், பெட்ரோல் மீதான விலையை குறைத்தது. விபத்தில் சிக்கியவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் 48 மணி நேர சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக எத்தனை குடும்பங்கள் இன்றைக்கு பிழைத்துள்ளது என்று தெரியுமா? விபத்துக்களில் சிக்கிய எத்தனை பேர் உயிர் பிழைத்து வந்துள்ளனர் என்று தெரியுமா? எனவே தமிழ்நாடு அரசு கடன் பெற்று மக்களுக்கு திட்டங்களாக வழங்கியுள்ளனர்.

பிரதமர் மோடி அவர்கள் ரூ.200 லட்சம் கோடியாக கடனை மாற்றியுள்ளார். அவர் என்ன செய்திருக்கிறார் என்று பார்த்தோமானால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி போன்றோர் உருவாக்கி வைத்திருந்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் விற்பனை செய்துவிட்டார்கள். சொந்த விமானம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றிவிட்டார்கள். தேசத்துக்கு சொந்தமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்துவிட்டார்கள். உக்ரைன் போரின்போது அங்குள்ள இந்திய மாணவர்களை அழைத்துவருவதற்கு ராணுவ விமானங்கள் தான் சென்றன. விமானத்தை விற்றுவிட்டீர்கள், ரயில்வே துறையை விற்க தொடங்கிவிட்டீர்கள். பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் விற்றுவிட்டீர்கள்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அதன் பயனை மக்களுக்கு வழங்காமல்,  அதற்கு மேலும் மேலும் செஸ் வரி போட்டு, வசூலித்து அந்த பணத்தை வேறு எடுத்து வைக்கிறீர்கள். இதுமட்டுமின்றி ரிசர்வ் வங்கியில் உள்ள கையிருப்பு எல்லாம் வாங்கிவிட்டீர்கள். இதற்கு மேலாக இவ்வளவு கடனும் ஆகிவிட்டது. இந்தியாவில் புதிதாக எத்தனை தொழிற்காலைகள் கொண்டு வந்திருக்கிறீர்கள். கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு ஒரு ரூ.100 கொடுத்திருப்பீர்களா? கொரோனா தடுப்பூசியாவது காசு இல்லாமல் போட்டீர்களா? அதுவும் நீதிமன்றம் தலையில் கொட்டிய பிறகு போட்டீர்கள். அதுவும் பெருவாரியாக மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன. மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? வேலைவாய்ப்பை கொண்டு வந்திருக்கிறீர்களா, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினீர்களா? டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பை சரியாமல் பார்த்துக்கொண்டீர்களா? இவ்வளவு கடனை வாங்கி வைத்துக்கொண்டு பாஜகவினர் பேசலாமா?

பிரதமர் மோடி

தமிழ்நாடு அரசின் 2025 -2026ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் எவ்வளவு முக்கியமான திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். குறிப்பாக அருங்காட்சியகம். கீழடியில் அருங்காட்சியகம் எப்படி அமைக்கப்பட்டதோ, அதுபோல மிக முக்கியமான இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் தமிழர்களின் பண்பாட்டையும், நாகரிகத்தையும் பறைசாற்றும்விதமாக அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது. இன்றும் வடஇந்தியாவில் பல இடங்களில் பேருந்து சேவையோ, ரயில் சேவையோ கிடையாது. ரயிலை, விமானத்தை பார்த்திருக்காத பல வடஇந்தியர்கள் உள்ளனர். ஆனால் ராமேஸ்வரத்தில் அடுத்த விமான நிலையம் என்று அறிவித்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் என்ன நடக்கும் என்றால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை நிறுத்திவிடுவார்கள். மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், புதிய தலைமைச் செயலகம், கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை கைவிட்டார்கள். ஆனால் திமுக அரசு கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் திட்டத்தை தொடர்கிறது. மாணவர்களுக்கு சைக்கிள், பொருளாதார சிக்கல் காரணமாக நிறுத்தப்பட்ட லேப்டாப் மீண்டும் வழங்கப்படுகிறது. கல்விக்கான நிதி தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கின்றன.

புதிய நீர்த்தேக்கங்கள் கொண்டுவருகிறார்கள். கிண்டி ரேஸ் கோர்சில் குளம் வெட்டி மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஈசிஆரில் புதிதாக நீர்த்தேக்கம் ஒன்றை ஏற்படுத்துகிறார்கள். கலைஞர் வீராணம் ஏரி திட்டத்தை கொண்டுவந்தபோது எதிர்க்கட்சிகள் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டின. ஆனால் அந்த வீராணம் ஏரித் திட்டம்தான் தலைநகர் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. திட்டங்கள் இவ்வளவு கொண்டு வந்திருக்கிறார்கள். கூடுதலாக என்ன செய்யலாம் என்று, என்ன செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் இடித்துரைக்கலாம்.அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒன்றுமே செய்யவில்லை என்பது போன்ற வாதங்களை வைப்பது, மக்களை மடைமாற்றும் வேலையாகும். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் எவ்வளவு கடன் வாங்கினார்கள். என்ன என்ன திட்டங்களை செயல்படுத்தினார்கள் என்று சொல்ல சொல்லுங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் கோரியபோது, நியமனப் பதவிகள் மூலம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளனர். இப்படி அனைத்து தரப்புக்கான திட்டங்களை செயல்படுத்தும் அரசை இவ்வளவு கேள்வி கேட்கிறார்கள் என்றால், எல்லாவற்றையும் விற்பனை வயிறு வளர்க்கும் மத்திய அரசை நாங்கள் ஏன் கேள்வி கேட்கக்கூடாது?.

தனியா நின்னா டெபாசிட் வாங்கியிருக்க மாட்டாங்க... - தமிழிசை

இந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தமிழக பட்ஜெட்டில் ரூ என்று ஏன் தமிழில் மாற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரூபாய்க்கான குறியீட்டை மாற்றக்கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தில் எங்காவது சொல்லப் பட்டிருக்கிறதா? இந்தியா முழுமைக்கு ஒரு சிம்பள். அந்த தேவநகரி சிம்பள் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? என்றால் இல்லை. ஒரு எழுத்தை மாற்றிவிட்டார்கள் என்று இவ்வளவு சண்டை போடுகிறார்கள். தமிழிசை இவ்வளவு ஆதங்கப்படுகிறார்கள். இவ்வளவு கோபத்துடன் இருக்கும் நீங்கள் மத்திய அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியை வாங்கித் தாருங்கள். தமிழகம் எவ்வளவு வஞ்சிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு நிதி தர மறுக்கிறதே, அதை யாரும் கேட்பதில்லை. ஸ்டாலின் ஏன் ரூ-வை மாற்றிவிட்டார் என்பதில் குறிக்கோளாக இருந்து ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். பட்ஜெட்டில் தேர்லுக்காக இலவச திட்டங்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மிகவும் தெளிவாக துறைகள் வாரியாக திட்டமிட்டு, சீராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ