Homeசெய்திகள்கட்டுரைமறுவரையறை அரசியலின் முக்கியத்துவம்! உடைத்துப் பேசும் சமஸ்!

மறுவரையறை அரசியலின் முக்கியத்துவம்! உடைத்துப் பேசும் சமஸ்!

-

- Advertisement -

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுவரையின்போது தமிழ்நாட்டிற்கு ஒரு சதவீத தொகுதிகள் கூட குறையாது என்று சொல்லாதது ஏன் என்று பத்திரிகையாளர் சமஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

samas
samas

தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளதன் பின்னணி குறித்து பத்திரிகையாயளர் சமஸ் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தொகுதி மறுவரையறை விவகாரம் இந்தியாவின் மிக முக்கியமான அடுத்தக்கட்ட நகர்வாக அமையும். இது இந்தி பேசாத மாநிலங்களை பெரிய அளவில் வதைக்குள்ளாக தள்ளிவிடும். அவர்களை அதிகாரம் அற்றவர்களாக ஆக்கிவிடும். மிகச் சரியாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை குறிப்பிட்டார். எண்ணிக்கை என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல. அதிகாரத்துடன் தொடர்பு உடையது, ஜனநாயகத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை மட்டுமே பொருள் கொண்டதாக மாறும் என்றால், ஜனநாயகம் என்பது பெரும்பான்மை வாதமாக மாறிவிடும். அதற்கு எதிராக அனைவருக்கும் சமமான பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைக்கிறோம். இது மிகவும் அற்புதமான முன்னெடுப்பு ஆகும்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதற்கு முன்பு 2 முறை தொகுதி மறுவரையறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டில் முதன் முறையாக தொகுதி மறுவரையறை தள்ளிவைக்கப்பட்டது. 25 ஆண்டுகள் முடிந்து 2001ம் ஆண்டில் வந்தபோதும் 25 ஆண்டுகள் தள்ளிவைத்தனர். தற்போது 2026ல் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. அதனை ஒட்டி இந்த கோரிக்கையை தென் மாநிலங்கள் வைத்துள்ளன. ஆனால் என்னை பொருத்தவரை தொகுதி வரையறையை தள்ளிபோடுவது நியாயம் இல்லை. தொகுதி மறுவரையறை சரியாக நடைபெற வேண்டும். அதற்கான முன்மொழிவையும் தமிழ்நாடு சரியாகவே வைத்திருக்கிறது. தற்போது நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதம் இருக்கிறது. அதற்கு இணையான சதவீதத்தை கொடுக்க வேண்டும்.  அதுபோல ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்க வேண்டும்.

1976 இந்திய அரசு ஸ்டராட்டஜிக்கல் பாய்ண்ட் ஆஃப் வியூவில் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வதற்கான உத்திகளில் ஒன்றாக மக்கள்தொகை கட்டுப்பாடு என்கிற கொள்கையை முன்னெடுத்தது. அதை அடி ஒற்றி சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களை காக்க வேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமையாகும். 1976ல் இந்த வேலைகள் தொடங்கியது. 1971ஆம் ஆண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் தொகை எவ்வளவு இருந்ததோ அதை அடிப்படையாக கொண்டு மறுவரையறை செய்யுங்கள். புதிய மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரியுங்கள்.அதேசமயம் அதே சமயம் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் என்ன பிரதிநிதித்துவம் இருந்ததோ, அதற்கு ஏற்ப இன்றைக்கு உயர்த்தி வழங்கிட வேண்டும். என்னை கேட்டால் 1950ல் குடியரசானபோது ஒவ்வொரு மாநிலமும் என்ன பிராந்திய ரீதியான முக்கியத்துத்தை பெற்றிருந்ததோ அதை நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்வேன்.

"குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும்"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!
Photo: Union Home Minsiter Amit Shah

கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டத்தின் மூலம் இந்த விஷயத்தை கவனப்படுத்துகிறோம். முதலில் தொகுதி மறுவரையறையை தமிழ்நாடு பேசியது. இன்றைக்கு 5 மாநிலங்கள் இதன் பிரதிபலிப்பை பேசியுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின்,  கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்,  கர்நாடன துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் உரத்த குரலில் இந்த விஷயத்தை பேசுவது இந்திய கூட்டாட்சி வரலாற்றிலேயே மிகவும முக்கியமான தொடக்கம். அடுத்ததாக ஐதராபாத்தில் நடக்கலம். பிறகு வேறு மாநிலங்களில் நடக்கலாம். தொகுதி மறுவரையறை விவகாரம் ஒரு உரையாடலாக மாற வேண்டும். மத்திய அரசு ஒரே நாடு ஒரே விஷயம் என்று பேசுகிறபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறபோது ஒரு தொகுதி கூட தமிழ்நாட்டிற்கு குறையாது என்கிறார். தொகுதி பற்றி யாரும் பேசவில்லை. ஒரு சதவீதம் கூட தமிழ்நாட்டிற்கு இடங்கள் குறையாது என்கிற வாக்குறுதியை தான் தமிழ்நாடு எதிர்பார்த்தது.

இதுபோன்ற விஷயங்களை காங்கிரஸ் பேச ஆரம்பிக்க வேண்டும். இது வடக்கு, தெற்கு பிரச்சினை அல்ல. இந்தி பேசும் மாநிலங்கள், பேசாத மாநிலங்கள் பிரச்சினை என்றுதான் இந்த தொகுதி மறுவரையறை விஷயம் மாற்றி அமைக்கும். வடகிழக்கு மாநிலங்களை இணைத்துகொள்ள வேண்டும். இந்தி பேசாத மாநிலங்கள் சில பயனடையலாம். இதை விரிந்த பொருளில் நாம் விவாதிக்க வேண்டிய பிரச்சினையாகும். தேசம் தழுவிய அளவில் விவாதிக்க வேண்டிய ஒரு விஷயமாகும். இதற்கு முன்னோட்டமாக இந்த கூட்டம் அமைந்திருக்கிறது. இது அடுத்தடுத்த அளவில் போவது என்பது, தேசிய அளவில விவாதம் ஆவது நன்மை அளிக்கும். இந்தியா கூட்டாட்சி பற்றி இப்போதுதான் விவாதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். 1950 களில் இருந்து மதச்சார்பின்மை தீவிரமான பேசு பொருளாக உள்ளது. 1980க்கு பிறகு சமூகநீதி, இடஒதுக்கீடு பேசு பொருளாக மாறியுள்ளது. 2014ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் கூட்டாட்சி என்பது பேசு பொருளாகி உள்ளது. அந்த வகையில் இது வரலாற்று சிறப்பு வாய்ந்த கூட்டமாகும், இவ்வாறு அவர் கூறினார்.

MUST READ