spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஎடப்பாடியை தூக்க போறாங்க! செங்கோட்டையன் வச்ச வெடி! அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்!

எடப்பாடியை தூக்க போறாங்க! செங்கோட்டையன் வச்ச வெடி! அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்!

-

- Advertisement -

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 100 இடங்கள் வரை என்டிஏ கூட்டணிக்கு வழங்கப்பட உள்ளதாகவும், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பாஜக சில இடங்களை கொடுத்துவிட்டு பெரும்பாலான இடங்களில் அவர்கள் போட்டியிட உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுகவை பொருத்தவரை செங்கோட்டையனை வைத்து காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. அதனுடைய வெளிப்பாடு தான் செங்கோட்டையன் எடப்பாடியை வெளிப்படையாக விமர்சித்தது. டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தது போன்றவையாகும். செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்த உடன், அவர்கள் செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் ஆக்குவது என்று தெளிவான திட்டத்தை போட்டுவிட்டார்கள். காரணம் எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என்பதால்தான்.

2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி விலகியதால், அவரை அதிமுக தலைமை பொறுப்பில் இருந்து நீக்குவது என்று தீர்மானித்துவிட்டனர். எனவே எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது. அவர் முதலமைச்சராக 4.5 ஆண்டுகள் இருந்தது அவருக்கு சுக்கிரன் உச்சத்தில் இருந்தது போன்றதாகும். செங்கோட்டையன் கைகளில் கட்சி போய்விடும். தற்போது ஓபிஎஸ், தினகரன், சசிகலா, செங்கோட்டையன் என எல்லோரும் ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்திற்கு செல்வார்கள். எனவே அதிமுக பழையபடி சசிகலாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று, எடப்பாடியை கட்சியில் இருந்து நீக்குவார்கள்.

சசிகலா - செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவை உருவாக்குவதற்காக பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சசிகலா ஒரு ரகசியத்தை காதில் சொல்லிவிட்டார். அது என்ன? என்று தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பதற்றமாக இருக்கிறார். 1986ல் கொலை வழக்கில் சிக்கிய எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றியவர் செங்கோட்டையன். அந்த வழக்கை திரும்ப விசாரிப்பார்கள். கொடநாடு கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிக்கினார் என்றால் அவருடைய கதை முடிந்துவிடும்.

 

செங்கோட்டையன் கைகளில் அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பு போனாலும், நிர்மலா சீதாராமன் முதலமைச்சர் ஆவார் என்று தகவல் வெளியாகின்றன. அதிமுக, பாஜக கூட்டணியில் பாதிக்கு பாதி இடங்களில் பாஜக போட்டியிட உள்ளது. அதிமுக 134 தொகுதிகளிலும், எஞ்சிய 100 இடங்களில் என்.டி.ஏ கூட்டணியும் போட்டியிட உள்ளன. பாஜக பார்த்து, கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பார்கள். அதிமுக அதிக இடங்களில் வென்றால் செங்கோட்டையன் முதலமைச்சர், ஓபிஎஸ் துணை முதலமைச்சர். பாஜக தரப்பில் ஒரு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.

எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு ஆதரவாக யாரும் செல்ல மாட்டார்கள். அதிமுகவை பொறுத்தவரை கட்சி யாரிடம் உள்ளதோ, அவரிடம் எல்லோரும் சென்றுவிடுவார்கள். செங்கோட்டையன் கைகளுக்கு இரட்டை இலை சென்றால், எடப்பாடியின் பின்னால் உள்ள எல்லோரும் செங்கோட்டையன் பின்னால் போய்விடுவார்கள். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டால் அவர் தனித்து தேர்தலில் போட்டியிட மாட்டார். ஆனால் அதிமுகவிலேயே ஒரு ஓரத்தில் இருந்து செல்வார்.

இதனிடையே, தென் மாவட்டங்களில் அதிமுக இழந்த முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை அனுப்பி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நயினாரை பார்ப்பதால், எந்த பயனும் கிடையாது. காரணம் அவருக்கு நெல்லையை தாண்டி பெரிய அளவில் செல்வாக்கு கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ