spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆளுநர் செய்த அந்த தவறுகள்! லெப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்! முக்கிய விவரங்களை பகிரும் வழக்கறிஞர்...

ஆளுநர் செய்த அந்த தவறுகள்! லெப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்! முக்கிய விவரங்களை பகிரும் வழக்கறிஞர் வில்சன்!

-

- Advertisement -

சட்ட மசோதாக்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது அவற்றுக்கு ஒப்புதலோ அல்லது நீதிமன்ற உத்தரவுக்காகவோ ஆளுநர் காத்திருக்கவில்லை என்றும், இதனால் நீதிமன்றம் அவரை நோக்கி கடுமையான வார்த்தைகளை பயப்படுத்தி உள்ளது என்றும் வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது – எம் பி. பி.வில்சன்

we-r-hiring

தமிழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் பின்னணி குறித்து வழக்கறிஞர் வில்சன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:-  2021ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றி அனுப்பப்பட்டு கொண்டிருந்தன. கிட்டத்தட்ட 10 மசோதாக்கள் அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநரிடம் இருந்து எந்த வித பதிலும் இல்லை. 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை காத்திருந்து அதிகாரிகளை அனுப்பி விசாரித்தபோதும் மசோதாக்களின் நிலை குறித்து எந்தவித பதிலும் சொல்லவில்லை. டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்திருந்தார். அதிமுகவை சேர்ந்த 3 முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரிய அனுப்பப்பட்ட கோப்புகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்து வந்தார். கைதிகள் தண்டனை குறைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை நேரில் அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, சட்ட ஆலோசனை பெற்று வழக்கு தொடரலாம் என்று முடிவுக்கு வந்தார். அதன்படி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் ஒரு மசோதாவை நிராகரிக்கிறேன் என்றால் அதை திருப்பி கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அதற்கு மேலே எந்த வித நடவடிக்கையும் தேவை இல்லை என்று சொன்னார். ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன நினைத்தார் என்றால், மசோதாக்களை கட்டி பீரோவுக்குள் பூட்டி வைத்துவிட்டால் அந்த மசோதாக்கள் இறந்துவிடும் என்று நினைத்தார். நீதிமன்றத்திலும் அதுபோன்றுதான் அவரது வாதங்களும் அமைந்திருந்தன. தமிழக அரசு சார்பில் முதன் முறையாக ஒரு மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பும்போது, அவருக்கு 3 வழிகள்தான் உள்ளது. ஒன்று மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும். 2 மசோதாக்களை நிறுத்திவைக்கலாம். 3வது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். ஆனால் இவற்றை அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அமைச்சரவையின் ஆலோசனை படிதான் செயல்பட முடியும்.

ஆளுநர் ரவிக்கு கடிவாளம்.. பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் ஸ்டாலின்.. உச்சநீதிமன்றம் அதிரடி..

தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்கள் தொடர்பான வழக்கில்  ஆளுநர் ஆர்.என்.ரவி, தன்னிச்சையாக 10 மசோதாக்களை பிரதி எடுத்து அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, ஒரிஜினல் மசோதாக்களை பீரோவுக்குள் வைத்து பூட்டிவிட்டார். அப்படி செய்வதால் அந்த மசோதாக்கள் முடிந்து விட்டதாக அவர் கருதினார். அந்த மசோதாக்கள் திருப்ப அனுப்பப்பட்டபோது, எந்த காரணமும் இல்லாமல் திருப்பி அனுப்பினார். அந்த மசோதாக்கலை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்தனர். அரசியலமைப்பு சட்டத்தின்படி 2வது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு  ஆளுநருக்கு எந்தவித வாய்ப்புகளும் கிடையாது. அவர் ஒப்புதல் கொடுத்தே ஆக வேண்டும். அந்நேரத்தில் பஞ்சாப் மாநில ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் 2வது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியாக வேண்டும்.  அவற்றில் இருந்து தப்பிக்கும் விதமாக இந்த மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதோடு நில்லாமல் 10 மசோதாக்களை நிராகரிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு  தன்னிச்சையாக கடிதம் எழுதினார். மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி 7 மசோதாக்கள் நிராகரிககப்பட்டது. ஒரு மசோதா ஏற்கப்பட்டது. இன்னும் 2 மசோதாக்கள்  கிடப்பில் போடப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது 7 மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு தகவல் தெரிவித்தார்.

வினேஷ் போகத்தின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது : குடியரசுத் தலைவர் முர்மு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது, ஒன்று அவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கலாம். அல்லது நீதிமன்ற தீர்ப்பு வரட்டும் என்று காத்திருக்கலாம். அதை விடுத்து ஆளுநர் வழக்கை முறியடிக்க வேண்டும் என்கிற மனநிலையில் இருந்தார். மசோதாக்களை சட்டமன்றத்தில் 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பி வைத்தும் அவர் ஒப்புதல் தராவிட்டால், அந்த மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கலாம் என்றும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது முதல் ஆளுநரின் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானது என்று நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தோம். அதற்கு ஏற்றார்போல் தீர்ப்பும் வந்துள்ளன.

சட்டமன்றத்தின் இறையாண்மையை தான் இந்த தீர்ப்பின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். சட்டமன்றத்திற்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்றுகிறார்கள். சிறப்பு சட்டத்தின் வாயிலாகவே பல்கலைக்கழங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் அடிப்படையில் தான் வேந்தர் பதவியும் உருவாக்கப்பட்டது. பல்கலைக் கழங்களுக்கு ஆளுநர், வேந்தராக இருக்க வேண்டும் என்று சட்டமன்றம்தான் முடிவு செய்தது. அப்படி உள்ளபோது சட்டமன்றம் கொடுத்த பதவியை அவர்களே திருமபி வாங்குவதில் என்ன உள்ளது. பிரச்சினையே என்ன என்றால் சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா?  இல்லையா என்பதுதான்.

இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்பட்டு உள்ளது. அதற்கு காரணம் பல்கலைக்கழக துணை வேந்தர்களை தேர்வு செய்யும் பணிகளுக்கு, ஆளுநர் ரவி இடையூறுகளை ஏற்படுத்தினார். தேடல் குழு அமைத்த பின்னர், திடீரென மற்றொரு நபரை தேடல் குழுவில் சேர்க்க சொல்லி பிரச்சினை செய்தார். இதன் காரணமாக இன்றுவரை பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். அப்போது அளுநருக்கு அதிகாரங்களை வழங்கிய சட்டமன்றமே அதை திரும்பப் பெற முயற்சிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பினால் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமையாகும். ஆனால் ஆளுநர் ரவி தனக்கு வானளவிய அதிகாரம் உள்ளதாக நினைத்துக்கொண்டு செயலாற்றினார். அதனால் தான் இந்த வழக்கில் நீதிமன்றம் கடும் சொற்களை பயன்படுத்தி உள்ளது. ஆளுநர் மசோதாவுக்கு எதிராக செயலபட்டுள்ளார் என்றும், இது முற்றிலும் தவறானது. சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துளளனர். நீதிமன்றம் இந்த அளவுக்கு சொல்ல காரணம் நாங்கள் அந்த அளவுக்கு ஆவணங்களை தாக்கல் செய்திருந்தோம்.

MUST READ