spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைTVK + காங்கிரஸ் கூட்டணி? விஜயை சந்தித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர்! பின்னணியை உடைக்கும் மில்டன்!

TVK + காங்கிரஸ் கூட்டணி? விஜயை சந்தித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர்! பின்னணியை உடைக்கும் மில்டன்!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை பிரித்து, விஜயுடன் சேர்க்கும் வேலையை காங்கிரசில் உள்ள தங்களுடைய ஆதரவாளர்கள் மூலம் ஆர்எஸ்எஸ் முயற்சித்து வருவதாக ஊடகவியலாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தவெக – காங்கிரஸ் கூட்டணி அமையும் என தகவல்கள் வெளியாகி இருப்பது தொடர்பாக ஊடகவியலாளர் மில்டன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் சம்பவத்தை தொடர்ந்து தவெக- பாஜக கூட்டணி அமையும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், தற்போது தவெக – காங்கிரஸ் இடையே கூட்டணி அமையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  மேலும், ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றபோது ராகுல்காந்தியிடம் பேசியதாகவும் சொல்கிறார்கள். ஆனால் தவெக – காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று ராகுலோ, விஜயோ அல்லது அவருடைய கட்சியை சேர்ந்த யாரும் அப்படி பேசவில்லையே? அதுவும் தகவல்தான். இவ்வளவு நாட்களாக அதிமுக – பாஜக கூட்டணிக்கு தவெக செல்வதாக கூறப்பட்டது. தற்போது காங்கிரசுடன் கூட்டணி என சொல்வதற்கு காரணம், எடப்பாடி பழனிசாமி போகிற இடங்களில் எல்லாம் அதிமுகவினரை வைத்து தவெக கொடியை காட்ட வைத்து, அவர்களை கூட்டணிக்கு இழுக்கிற முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன.

விஜய், அதிமுக உடன் சேர்த்து பாஜக இருக்கும் கூட்டணியோ, அல்லது பாஜக இல்லாத கூட்டணியோ விஜயை தனியாக இருக்க வைத்தல் என்பதற்கு பின்னால் உள்ள அரசியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டை பொருத்தவரை பாஜக காலூன்ற முயற்சிக்கும் போது எல்லாம், அதற்கு தடையாக இருப்பது இங்குள்ள திமுக – அதிமுக என்கிற இரு துருவ அரசியலாகும். இவற்றை தவிர்த்து 3வதாக ஒரு கட்சி இருந்தால் அது நமக்கு கிடைக்கக்கூடிய பெரும் வாய்ப்பு என்று பாஜக கருதுகிறது. விஜய் என்னவாக இருந்தாலும் சரி, அவர் தனியாக இருக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து இருக்கக்கூடாது. தனியாக ஒரு அணியாக அமைத்துவிட்டால் அந்த இடத்தை நோக்கி நகர்த்தி விடலாம். இரண்டாவது இடத்தில் உள்ள ஆளை பலவீனப்படுத்தி அந்த இடத்திற்கு பாஜகவை நகர்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். அதிமுக, தவெக, பாஜக கூட்டணி அமைக்க, பாஜக சில நபர்களை இறக்கிவிட்டது. எப்பாடியை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்ல விஜய்க்கு நிர்பந்தம் கொடுத்தது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் விஜயுடன் நடைபெற்றது.

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, ஜனநாயகன் திரைப்படத்திற்காக காட்சிகள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருப்பதாக சினிமா துறையில் இருப்பவர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளன. அதை படத்தின் புரொடக்ஷன் டீமில் இருப்பவர்கள் உறுதிபடுத்தியதால் தான் நக்கீரன் கோபால் வெளிப்படையாக இந்த விஷயத்தை பேசினார் என்றும் சினிமா பத்திரிகையாளர் மத்தியிலும் தகவல் உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது எஸ்.ஐ.டி போட்டு விசாரித்தால் தெரிந்துவிடும். எனவே எஸ்.ஐ.டிக்கு தடை கோரி ஆதவ் அர்ஜுனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கரூர் விவகாரத்தால் விஜய்க்கு அரசியில் ரீதியாக இருந்த நம்பகத் தன்மை உடைந்துவிட்டது. கரூர் விவகாரத்தில் அது நீதிமன்றத்தில் சரியாக நிறுத்தப்பட்டு, தண்டனை கிடைக்கும் பட்சத்தில் விஜய்க்கு அதில் பங்கு இருப்பது என்பது பேசு பொருளாகும். அந்த நேரத்தை நாம் கைகளில் வைத்துக்கொண்டு விஜயை,  நம்முடன் சேருவதற்கு டீல் பண்ணுவோம் என்றுதான் மேலிடத்தில் இருந்து ஒரு நெக்சஸ் இயங்கிக் கொண்டிருந்தது.

விஜய் தரப்பில் தலைமறைவாக இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள், திமுகவை ஒழிப்பதற்காக பாஜக உடன் கூட்டணிக்கு போகலாம் என்கிற முடிவை எடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த கட்சியை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் பாஜக கூட்டணி வேண்டாம். பாஜகவை கழட்டிவிட்டு அதிமுக தனியாக வந்தால் கூட்டணிக்கு செல்லலாம் என்கிறார்கள். விஜய் தரப்பில் டிசம்பர், ஜனவரி மாதம் வரை கூட்டணி தொடர்பாக பேச வேண்டாம் என்றும், தேவை இல்லாமல் பேசி ஜனநாயகன் படத்தின் வெளியீட்டிற்கு பிரச்சினை வரக்கூடாது. அந்த படம் வெளியான பிறகு கூட்டணி விவகாரங்களை பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். பாஜக தரப்பில், விஜயை கட்சி தொடங்கி தனியாக இயங்க விடுவதே ஒரு கணக்குக்காக தான். அந்த கணக்குக்கு பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் சில விஷயங்களுக்கு விஜய் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் டெல்லியில் இருந்து வரும் தகவல்களாகும்.  அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. அதன் காரணமாக தான் 2 நாட்களுக்கு முன்னர் தவெக தரப்பில் டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்னும் பலர் விஜய் தரப்பினருடன் சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள்

இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிற போதே, அரசியல் வாழ்க்கையை வைத்து கூட்டணியை விஜய் முடிவு செய்வதாக இருந்தால் இரு துருவ அரசியலை உடைக்க புதிய அணி ஒன்றை உருவாக்குங்கள் என்று சொல்கிறார்கள். அந்த டாஸ்கை காங்கிரசில் இருந்து எடுக்கிறார்கள். காங்கிரசில் உள்ள ஆர்எஸ்எஸ் அனுதாபிகள் எல்லாம் சேர்ந்து பாஜக உடன் ஒரு டீல் போடுகிறார்கள். தற்போது காங்கிரஸ் திமுக ஆதரவு, விஜய் ஆதரவு என்று 2 கோஷ்டிகளாக பிரிந்துள்ளன. விஜய் ஆதரவு கோஷ்டிகளுக்கு பணம், கன்டென்ட், கருத்துருவாக்கம் செய்து விஜய்க்கு ஆதரவாக பேச வைத்து, விஜய் – காங்கிரஸ் கூட்டணி என்பதற்கு தூபம் போடுகிறார்கள். அதன் அடிப்படையில் சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்த வேலையை தொடங்கியுள்ளனர். டெல்லியில் இருக்கும் காங்கிரசுக்கே தவெக உடன் சேர்ந்து நின்றால் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஒரு சிறப்பான இடத்தை நாம் பல ஆண்டுகள் கழித்து பெற முடிகிறது. இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று ராகுல்காந்தியிடம் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்

அஜெண்டா என்பது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிப்பதாகும். அதை காங்கிரசில் உள்ளவர்களை வைத்தே செய்ய வைக்கிறார்கள். விஜயால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. 2வது  பெரிய கட்சியாக வர முடியும் என்கிற நம்பிக்கையையும் உருவாக்க முடியவில்லை. அப்போது அதிமுக உடன் கூட்டணி என்கிற முடிவுக்கு வந்தால், டீலுக்கு விஜய் ஒத்துவர வேண்டும். அப்படி இல்லா விட்டால் இரு துருவ அரசியலை உடைத்து மூன்றாவதாக அங்கிருந்து ஒரு ஆளை கூட்டிவந்து நீங்க சேர்த்துக்கொள்ளுங்கள். காங்கிரசில் உள்ள தனது பேச்சை கேட்கிற ஆட்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். காங்கிரஸ் வந்தால் ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இப்படி செய்தால் 2029ல் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. தமிழ்நாட்டிற்குள் பாஜகவால் நுழைய முடியாது என்று சொன்னோமோ, அந்த பாஜக நுழைவதற்கான வழியை ஏற்படுத்தி கொடுப்பவராக விஜய் செயல்படுகிறார். அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் முகமாக உள்ள ராகுல் காந்தியோ, செல்வப் பெருந்தகையோ விஜய்க்கு ஆதரவாக பேசினார்களா?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ