Homeசெய்திகள்கட்டுரைதனி விமானத்தில் விஜய்! புஸ்ஸான தவெக பூத் கமிட்டி மீட்டிங்!

தனி விமானத்தில் விஜய்! புஸ்ஸான தவெக பூத் கமிட்டி மீட்டிங்!

-

- Advertisement -

கோவையில் நடைபெறுமு தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கிற்கு வந்தவர்கள் விஜயின் ரசிகர் மன்ற கூட்டம்தான் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

2026 தேர்தலில் தவெக சிறிய சலசலப்பை ஏற்படுத்தும்: ஆனால் வெற்றி பெற முடியாது – ராஜ கம்பீரன் பேட்டி

கோவையில் நடைபெற்ற தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- கோவையில் த.வெ.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இதுபோன்ற காட்சிகளை ஊடகங்களில் காண முடிந்தது. பல அரசியல் கட்சிகளுக்கு மாநகரங்களில் கொடி பறக்கும். சிறிய ஊர்களில் நகராட்சிகள் வரை கூட கொடி பறக்கும். அடுத்து பேருராட்சி, ஊராட்சிகளில் சென்றால் கட்சி இருப்பதற்கான சுவடுகளே தெரியாது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் குருவி கூடு கட்டுவதற்கு அஞ்சுகிற கிராமங்களில் கூட கொடி பறந்துகொண்டிருக்கும். அங்கு ஒரு கிளைச் செயலாளர் இருப்பார். ஒரு 50 பேரை உடனடியாக திரட்டுகிற வலிமை திமுக, அதிமுகவுக்கு உள்ளது. விஜய்க்கு கூட்டமே இல்லாமல் இவ்வளவு பேரை கூட்டியுள்ளனர். அவர்கள் எல்லாம் விஜயை பார்க்க வந்துள்ளார்கள்.

பெரிய அரசியல் கட்சி என்று எதை சொல்கிறோம் என்றால் தொண்டர்கள் இருப்பது மட்டும் அல்ல. எம்ஜிஆர் என்றால் ஊருக்கே கொடுத்த சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தது. இந்த நம்பகத்தன்மை தான் மக்கள் மத்தியில் தலைவருக்கான ஒரு கிரீடத்தை கொண்டு வந்து கொடுக்கும். விஜயை சந்திக்க அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கே அனுமதி கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்தாலேயே அவரை அடிக்கடி சந்திக்க முடியுமா? என்று தெரியவில்லை. விஜய் நடத்தும் பூத் ஏஜெண்ட் மாநாடு என்பதற்கு, ரசிகர் மன்றத்திற்கான கூட்டம் தான் அதற்கு வந்துள்ளது.

ஏன் என்றால், அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள், பொதுமக்களை தன்பக்கம் ஈர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் யாரும் வேன் மீது ஏறி வந்து வித்தைகள் காட்ட மாட்டார்கள். பயங்கரமாக வேன் மீது ரசிகர்கள் ஏறுகிறார்கள். பூத் ஏஜெண்ட் மாநாடு நடத்துகிறபோது எதற்காக ரோடு ஷோ செல்கிறார் விஜய். ரோடு ஷோ என்பது தமிழ்நாட்டில் தோல்வியடைந்த ஒரு முயற்சியாகும். பாண்டி பஜாரில் ஒருவர் ரோடு ஷோ போனார். வியாபாரிகள் எல்லாம் கடைகளை அடைத்துவிட்டு சென்றார்கள். அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். பூத் ஏஜெண்ட் என்றால் என்ன என்று முதலில் விஜய்க்கு யாராவது விளக்கம் சொல்வார்களா என்று தெரியவில்லை. என் தெருவில் எத்தனை பேர் குடியிருக்கிறார்கள். எத்தனை பேர் கட்சியின் மீது அபிமானம் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பேர் நமக்கு வாக்களிப்பார்கள் என்று கணித்து, சரியான ஆட்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச்சென்று சேர்க்கும் வேலைதிட்டம்தான் , பூத் ஏஜெண்ட் வேலை திட்டமாகும்.

சிவாஜி வாக்கையே மற்றொருவர் செலுத்திவிட்டதாக சொல்வார்கள். அரசியலில் அவர் வெற்றிபெறவில்லை. அவருடைய தொடர்ச்சி தான் கமல்ஹாசன். அவருடைய தொடர்ச்சியாக தான் இப்போது விஜய் வந்து கொண்டிருக்கிறார். விஜய் முக்கியமான ஆள் என்று காட்டுகிறார்கள். அசியல் கட்சியில் விஜய் மட்டும் முக்கியமான ஆள் என்று கட்சியை நடத்த முடியாது. எம்ஜிஆர் மட்டும் தனியாக கட்சி நடத்தவில்லை. திமுகவில் அண்ணாவோடு பயணித்த நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், ஆர்.வீரப்பன் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளின் வரிசை இருந்தது. அவர்கள் பொதுவாழ்வில் அனுபவம் மிக்கவர்கள். எம்.ஜி.ஆரின் குறைகளை பலவீனங்களை மறைத்து, அவரை ஒரு ஆளுமையாக காட்டினார்கள். ஆனால் புஸ்ஸீ ஆனந்த் விஜயை ஒரு ஆளுமையாக காட்டுவாரா? என்றால் அவருக்கு ஏதாவது தெரியுமா? அவர் எம்எல்ஏவாக இருந்தவர் தான். விஜய்க்கு ஒரு கூட்டம் வரும். அதில் நமக்கு சந்தேகம் கிடையாது.

இன்றைக்கு பாருங்கள் விஜய், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் என்று கூட்டமாக செல்லாமல் தனி விமானத்தில் விஜய் கருத்தரங்கிற்கு செல்கிறார். எதற்காக அப்படி தனி விமானத்தில் செல்கிறார்? விஜய்க்கு இருக்கும் ஒரே தகுதி அவரை பார்க்க மக்கள் கூட்டம் கூடிவிடும் என்பதுதான். தனது வாழ்நாள் முழுக்க தீண்டாமையை  ஒழிக்கும் வேலையை தான் திருமா செய்து கொண்டிருக்கிறார். அவரால் கட்சி கொடி ஏற்ற முடியவில்லை என்று அவர்தானே சொல்கிறார். சாதிய மனநிலை கொண்டவர்களை மாற்ற முடியவில்லை. சமுகத்தில் வந்து வேலை செய்கிறபோது, பெரிய மாற்றத்தை நிகழ்த்த முடியவில்லை என்பதுதான் சிக்கலாகும். இதனை ஆட்சியின் மீதான தவறாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது சமுகத்தில் உள்ள பிரச்சினை. ஒரே ஒருநாள் அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்றால் திருமாவளவன் எதற்கு ஊர் ஊராக சுற்றுகிறார்.

வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் மாபெரும் பேரணி – திருமாவளவன்

ஒவ்வொரு ஊரில் இருக்கிற நிர்வாகியும், விஜய் தனித்தனியாக சந்தித்து பேச வேண்டும். ஒவ்வொருவர் மீதும் தனித்த கவனம் செலுத்த வேண்டும். அதுதான் கட்சித் தலைவருக்கான அழகு. நான் முக்கியமான ஆள். நான் தனி விமானத்தில் வருவேன், நான் பெரிய ஆளு என்று சொல்பவர்கள் யாரும் தலைவர் கிடையாது. தன்னை நம்புகிறவர்களை, தொண்டர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கும் இடத்தில் இருப்பவர்தான் தலைவராக முடியும். தவிர தன்னையே பெரிய ஆளாக நினைப்பவர்கள் பெரிய ஆளாக வர மட்டார்கள்,இவ்வாறு அவர் தெரிவித்தார்

MUST READ