spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசிபிஐ விசாரணையில் விஜய்! தூசி தட்டி எடுக்கப்படும் புதிய கேஸ்! சிவப்ரியன் நேர்காணல்!

சிபிஐ விசாரணையில் விஜய்! தூசி தட்டி எடுக்கப்படும் புதிய கேஸ்! சிவப்ரியன் நேர்காணல்!

-

- Advertisement -

விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஏற்படும் அனுதாபம் காரணமாக அவர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிகமாக பிரிப்பார் என்று பாஜக நினைப்பது, அவர்களுக்கே பாதகமாக முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் சிவப்ரியன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் வழக்கின் விசாரணைக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஆஜராகி உள்ளார். இந்த வழக்கில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளிடமும், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இனி விஜயிடம் மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு பதிவு செய்த எப்.ஐ.ஆரில் விஜயின் பெயர் போடவில்லை. அது அரசியல் ரீதியான முடிவு ஆகும். எப்.ஐ.ஆரில் விஜயின் பெயர் இல்லாவிட்டாலும் அவரிடம் விசாரிக்காமல் வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இருக்காது. காரணம் விபத்து நடைபெற்றது விஜயின் பொதுக்கூட்டமாகும். அவர்கள் எல்லாம் விஜயை பார்க்க தான் அங்கே கூடினார்கள். பொதுவாக மற்றவர்கள் இப்படி சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது போன்ற விசாரணையாக தான் இருக்கும். கிடுக்குப்பிடி விசாரணைக்கு எல்லாம் பெருமளவு வாய்ப்புகள் இல்லை.

நீங்கெல்லாம் CM ஆனா மக்களுக்கு ஒன்னும் பண்ண மாட்டீங்க.... விஜயை விமர்சித்த பிக் பாஸ் பிரபலம்!

தவெக தரப்பிலோ, மற்றவர்களோ என்ன சொன்னாலும் இது ஒரு விபத்து தான். இந்த வழக்கில் நீங்கள் யாரையும் குற்றம்சாட்ட முடியாது. விஜய் தாமதமாக வந்தார் என்பது மட்டும் தான் குற்றச்சாட்டு. ஆனால் அவர் உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு கிடையாது. கூட்டநெரிசல் சம்பவத்திற்கு மூன்றாவது நபர் ஒருவர் காரணம் என்று தவெக தரப்பில் சொல்லப்படுகிறது. அப்படி இருந்தாலும், அவர்கள் தான் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் வேண்டும். நாளைக்கு ஒருவரை அழைத்து விசாரிக்கலாம். கைது நடவடிக்கை கூட மேற்கொள்ளலாம். ஆனால் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். தவெக தரப்பில் மாநில காவல்துறையில் விசாரணை நடைபெற வேண்டாம் என்று, சிபிஐக்கு மாற்றிக் கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் நடந்திருந்தால் பெரிய அளவில் அரசியல் மைலேஜ் கிடைத்திருக்கும். பெரிய அளவில் அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஜனநாயகன் படம் திட்டமிட்டவாறு 9ஆம் தேதி வெளியாகவில்லை. 12ஆம் தேதி அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதற்கு மத்தியில் புலி படம் தொடர்பான வழக்கில் விஜய் மீதான நடவடிக்கை சரி என்பது போன்ற செய்தி கசியவிடப்படுகிறது. இவற்றை இணைத்து பார்க்கும்போது விஜய்க்கு அரசியல் அழுத்தம் உள்ளது. எப்படியாவது கூட்டணிக்கு வாங்க என்று பாஜக மிரட்டுகிறது என்றுதான் நான் பார்க்கிறேன்.

ஜனநாயகன் படத்திற்கு தடை கோரிய விவகாரத்தில் தணிக்கை வாரியத்தியின் நடவடிக்கை இயல்புக்கு மாறாக உள்ளது. கரூர் வழக்கின் விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரலே ஆஜராக வாய்ப்புகள் உள்ளது. எப்படியாவது அந்த படத்தை வெளியிடக்கூடாது என்பது தான் அவர்களின் எண்ணமாக உள்ளது. மற்றொன்று விஜயை சிபிஐ டெல்லிக்கு அழைக்க காரணம் என்ன? சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றால், விஜயின் வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தலாம். அவருடைய வாக்கு மூலத்தை பதிவு செய்து, குற்றப்பத்திரிகையில் பதிவு செய்ய வேண்டும். விஜய்க்கு எப்படியாவது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அல்லது விஜய்க்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் விஜய் மீது அனுதாபம் ஏற்பட்டால், அவர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிகமாக பிரிப்பார் என்றும் அரசியல் ரீதியாக கணக்கு போடலாம். ஆனால் தவறான அரசியல் நடவடிக்கையாகும். காரணம் தவெக தொண்டர்கள் எல்லாம் அதிமுக – பாஜகவை வெற்றி பெற விடக்கூடாது என்று பேசி வருகிறார்கள். விஜய்க்கு அவர்கள் கொடுக்கும் அழுத்தம், என்டிஏ கூட்டணிக்கு தலைவலியாக மாறுகிறது. கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரித்து பேசியது அரசியலுக்காக தான். கூட்டணி கணக்குதான்.

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், இது குறித்து விஜய் இன்னும் வாய் திறக்கவில்லை. விஜய், பாஜக கூட்டணிக்கு சென்றுவிடக் கூடாது என்பதால், காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இதில் இருந்து வேறு எதையும் நான் பார்க்கவில்லை. ஒரு மாநில தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தேசிய அளவிலான கூட்டணியை உடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அதேவேளையில் 2026 தேர்தலில் விஜய் குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற்றார் என்றால், 2029 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அவருடனும் கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

2009 முதல் விஜய்க்கும், ராகுல்காந்திக்கும் இடையே நட்பு நீண்ட காலமாக உள்ளது. எனவே விஜயை டெல்லிக்கு அழைப்பது என்பது ஒரு அரசியல் செய்தியாக தான் பார்க்கிறேன். காங்கிரஸ் கேட்கும் அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து தேர்தல் வரை திமுக பேசாது. தேர்தலுக்கு பின்னால் அந்த சூழ்நிலை ஏற்பட்டால் திமுகவே அழைத்து பேசும். பாஜக போன்ற கட்சி தமிழ்நாட்டில் இருக்கும்போது, அவர்களால் மைனாரிட்டி அரசாங்கம் நடத்த  முடியாது. நாளைக்கு அவசியம் ஏற்பட்டால் கூட்டணி ஆட்சிக்கான ஏற்பாடுகளை திமுகவே செய்யும். ஆனால் திமுக கூட்டணியில் ஒரு விரிசல் முகம் இருக்கிறது.

MUST READ