spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைரூ.888கோடி ஊழல் விவகாரம்.. கடிதம் அனுப்பியது உண்மையில் ED தானா?? வலுக்கும் சந்தேகம்..

ரூ.888கோடி ஊழல் விவகாரம்.. கடிதம் அனுப்பியது உண்மையில் ED தானா?? வலுக்கும் சந்தேகம்..

-

- Advertisement -
ரூ.888கோடி ஊழல் விவகாரம்.. கடிதம் அனுப்பியது உண்மையில் ED தானா?? வலுக்கும் சந்தேகம்..

நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888.30 கோடி ஊழல் நடந்துள்ளதாக , தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது உண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தானா? என தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 காலியிடங்கள், அண்மையில் நிரப்பப்பட்டன. 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் , எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். நடப்பாண்டு ஆக்ஸ்ட் மாதம் 6ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிலையில் பணி நியமனம் பெற்ற 2,538 பேரில் 150 பேர் ரூ.25 முதல் ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுத்து அரசு வேலை பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை சந்தேகம் எழுப்பியுள்ளது.

முன்னதாக அமலாக்கத்துறை, கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தியது. 3 நாட்கள் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய ட்ரூ வேல்யூ ஹோம் (TVH) நிறுவனத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது இந்த 2,538 பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அமலாக்கத்துறை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தக்கோரி, மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர்கள் அடங்கிய ஆதாரங்களுடன், 232 பக்க கடிதம் ஒன்றை அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு  எழுதியுள்ளது.

we-r-hiring

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/major-changes-coming-into-effect-from-tomorrow/183112

சோதனையின்போது அமைச்சரின் சகோதரர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்த்துவிட்டதாகவும், தேர்வை நடத்திய அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கூறியிருக்கிறது. மேலும், 150 பணியிடங்களுக்கு லஞ்சம் கைமாறியிருப்பதாகவும், அதிலும் ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெறப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க அமலாக்கத்துறை எழுதியுள்ள 232 பக்க கடிதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில், அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை வைத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு (DVAC) போலீஸாரால் வழக்கு பதிவு செய்ய முடியாது. ஏனெனில் சட்டத்தில் அதற்கு இடமில்லை. சட்டப்படி DGP-ஆல் நேரடியாக உத்தரவிடவும் இயலாது. காரணம் சட்டம் ஒழுங்கு போலீஸார் மாதிரி DVAC வழக்கு பதிவு செய்திட முடியாது. ஊழல் புகார்கள் தொடர்பாக முறைப்படி புகார் கொடுத்தாலே, முதல்கட்ட ( Preliminary) விசாரணை செய்வதற்கே அனுமதி வேண்டும். பிறகு விரிவான விசாரணை நடத்துவதற்கு தனி அனுமதி, அதன் பிறகு அதனை சாதாரண வழக்காக மாற்ற தனி அனுமதி, அதற்கு பிறகே FIR பதிவு என பல அடுக்குகள் உள்ளன.

2018-ல் ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து அரசு ஊழியர்கள் மீது FIR பதிவு செய்வதற்கு ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகள் அனுமதித்தால் மட்டுமே FIR பதிவு செய்ய முடியும் என்ற வகையில் ஒரு கட்டாயத்தை Prevention of Corruption Act-ல் மாற்றத்தை செய்து அந்த சட்டத்தையே மாற்றி வைத்திருப்பது மத்திய அரசு தான். இது அனைத்தும் அமலாக்கதுறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். இவை அனைத்தும் நன்றாக தெரிந்தே DGP-க்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பதே சந்தேகத்தை வலுப்பெறச் செய்கிறது.

http://‘ஆர்யன்’ படத்தை பார்க்கும் முன் ‘ராட்சசன்’ படத்தை பார்க்காதீங்க…. விஷ்ணு விஷால் வேண்டுகோள்!

ஊழலை ஒழிக்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை செயல்படுகிறது என்றால், சென்னை அலுவலக அதிகாரிகள் முறைப்படி DVAC-ல் புகார் தந்திருக்க வேண்டும். யாரையாவது ஏதாவதொரு காவல் நிலையத்திலாவது புகார் கொடுக்க வைத்திருக்க வேண்டும். ஆனால்,அதை அமலாக்கத்துறை செய்யவில்லை. அத்துடன் டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது என்பது இதுவரை அமலாக்கத்துறை தனது வரலாற்றில் எப்போது செய்திராத ஒன்று. இவை அனைத்தும் தமிழக அரசை மிரட்டி பணியவைப்பதற்காக, அமலாக்கத்துறை பாஜகவுடன் கரம் கோர்த்து செய்யப்படும் அப்பட்டமான உள்நோக்கம் கொண்ட அரசியல் என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் வெளிவரவேண்டும் என்றால், தமிழக காவல்துறை ED அதிகாரியின் பெயரில் வெளியாகியுள்ள கடிதத்தின் பேரில் நிச்சயம் விசாரணையை தொடங்க வேண்டும். கடிதத்தை அனுப்பிய நபர் உண்மையிலேயே ED அதிகாரி தானா, அவர் ECIR/CEZO/1/15/2024 என்ற வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவரா? என்ற இடத்தில் இருந்து விசாரணையை முறைப்படி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் கொடுத்து துவங்க வேண்டும்.

MUST READ