spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை65 லட்சம் பேரை நீக்குவியா? 3 நாள் கெடு! உச்சநீதிமன்றம் அதிரடி!

65 லட்சம் பேரை நீக்குவியா? 3 நாள் கெடு! உச்சநீதிமன்றம் அதிரடி!

-

- Advertisement -

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- ராகுல்காந்தி பற்றவைத்த நெருப்பு அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் பலரை நீக்கியுள்ளது. பலரை சேர்த்துள்ளது. சொந்த மாநிலத்தில் வாக்களிக்கும் உரிமையை பறித்து அவர்களை வேறு மாநிலத்திற்கு கொடுத்திருக்கிறது. பலர் இறந்துவிட்டதாக கூறியுள்ளது. அவர்களுடன் ராகுல்காந்தி சேர்ந்து டீ குடித்துக்கொண்டிருக்கிறார். இப்படி தேர்தல் ஆணையம் செய்த அனைவற்றையும், ராகுல்காந்தி தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்கு போட்டனர். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க கோரி கேட்டிருந்தனர். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 3 நாட்களில் வாக்காளர் பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பலரும் உச்சநீதிமன்றம் அவர்களுக்கு உத்தரவிடுவது போல உத்தரவிடும், பின்னர் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கும் என்று சொல்கிறார்கள். எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நமக்கு கிடைக்கக்கூடிய சிறிய சிறிய ஆயுதங்களையும் நாம் கூர்தீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒருவருக்கு ஒரு வாக்குரிமை என்பது எளியவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதமாகும். ஆனால் அதை பறிப்பதற்கான வேலை மிகவும் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது.

பீகாரில் மட்டும் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று புலனாய்வு குழு  போன்று ராகுல்காந்தியும், காங்கிரசும் அமைத்து ஆய்வு மேற்கொண்டதில் தெரியவந்துள்ளது. கர்நாடகாவிலும் இதேபோல் செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் சொல்லியபோதும் நீதிமன்றம் பெரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என்ன நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தாலும் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில், 3 நாட்களில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை சொல்ல வேண்டும். அதனை உடனடியாக சரிபார்த்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால், மாவட்ட அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவரத்தை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளது.  இது தற்போதைக்கு ராகுல்காந்தி எடுத்திருக்கும் முயற்சிக்கு வெற்றியாகும். ராகுல்காந்தி வரும் 17ஆம் தேதி முதல் தேர்தல் முறைகேட்டை கண்டித்து யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் 35 லட்சம் பேர் வெளி மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக இருப்பதாக சொல்கிறார்கள். இவர்கள் தற்போது வசிக்கின்ற மாநிலத்தில் வாக்காளர்களாக விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்கள் தங்கள் மாநிலத்தில் இரண்டு கட்சிகளுக்கு மாற்றி மாற்றி வாக்களிப்பாளர்கள். பிற மாநிலங்களில் சென்றால் எந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்று எல்லாம் சேர்ந்து தற்போது 3 நாட்களுக்குள் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது ஓரளவுக்கு ஜனநாயகத்தில் ஆறுதலான விஷயமாகும். இதன் அடுத்தக்கட்டமாக தேர்தலுக்கு எந்திரங்களை விட வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. உ.பி.யில் சமீபத்தில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது. சீதாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்றது. சுயேட்சை வேட்பாளர் 2 முதல் 4 இடங்களை பிடித்தனர். பாஜக 5வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு காரணம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதாகும். எனவே வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றால் எதிர்க்கட்சிகள் தான் வெற்றி பெறும்.

தேர்தல் களம் சூடுபிடிக்கிறது... முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக மோசடி செய்து பிடிபட்டுள்ளது. கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதை ராகுல்காந்தி, இந்தியா டுடே ஆகியவை வெளிப்படுத்தி விட்டன. இவ்வளவு நடைபெற்ற பிறகு நாங்கள் புனிதமான தேர்தல் ஆணையத்தை எப்படி கேள்வி கேட்க முடியும் என்றால்? தேர்தல் நடத்துவதே அவசியமற்றதாகும். என்னை கேட்டால், மகாராஷ்டிரா தேர்தல் செல்லாது. 2024 மக்களவை தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு வழங்கினால்தான் அது நேர்மையாகும். வாரணாசி தொகுதியில் தந்தைக்கு வயது குறைவாகவும், மகனுக்கு வயது கூடுதலாகவும் வந்துள்ளது. ஒருவருக்கு 43 பிள்ளைகள் என்று வந்துள்ளது. பாஜக வெற்றிபெற்ற அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு திடீரென அதிகரித்துள்ளது. இதையும் உச்சநீதிமன்றம் கேள்வி கேட்க வேண்டும். இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக இருந்த உச்சநீதிமன்றம் தற்போது திடீரென கேள்வி எழுப்பியுள்ளது. இது ராகுல் பற்றி வைத்த நெருப்புதான். ராகுல் அடுத்து யாத்திரை செல்கிறார். அவர் தெருவில் இறங்கி போராடுகிறார். எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு நான் தெருவில் நிற்க தயார் என்கிறார். அவருக்கு பிரதமராக வேண்டும் என்கிற ஆசை இல்லை. ஆனால் இந்த மதவாத அமைப்புகள் மாற வேண்டும்.

தேர்தல் ஆணையம் என்கிற பெயரில் ஒரு கட்சியின் கைப்பாவையாக இருக்கிற இந்த இழிநிலை மாற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக தொடர்ந்து பாடுபடுகிறார். அந்த உழைப்பிற்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்க வேண்டும். அதனுடைய முதல் பகுதியாக தான் உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள மூன்று நாள் கெடு ஆகும். அடுத்தபடியாக வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பாஜக வெற்றிபெற முடியாது. உ.பி.யிலே இது சாத்தியமாகும் போது, மற்ற இடங்களிலும் சாத்தியம்தான். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் போய்விட்டால் பாஜக வெற்றி பெற முடியாது. கடந்த 2 தேர்தல்களாக மக்கள் ஆதரவில் பாஜக வெற்றி பெறவில்லை என்பது உறுதியாகிறது. உச்சநீதிமன்றத்தின் அடுத்த நடவடிக்கை, ராகுல்காந்தியின் யாத்திரை ஆகியவை இதற்கு ஒரு விடிவு தரும் என்று நம்பலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ