spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவெளியேறும் மதிமுக?  பிரஷரில் இருக்கும் அதிமுக! ரகசியம் உடைக்கும் ஷ்யாம்!

வெளியேறும் மதிமுக?  பிரஷரில் இருக்கும் அதிமுக! ரகசியம் உடைக்கும் ஷ்யாம்!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறினால் அந்த இடத்தை தேமுதிகவை வைத்து சரிகட்டலாம் என திமுக தலைமை எண்ணுகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

மதிமுக பொதுக்குழுவில் திமுகவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பாகவும், கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுமா? என்பது தொடர்பாகவும் தராசு ஷியாம் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதிமுகவில் எம்.எல்.ஏ வேட்பாளராக போட்டியிட்டவரை, கூட்டணி கட்சியினரை சேர்ப்பதில்லை என்று எப்போதும் கடைபிடிக்கிற மரபை தாண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேர்த்துள்ளார் என்றால்? அதற்கு விடை கிடைக்கும் அல்லவா? ஸ்டாலின் அல்ல, மறைந்த கலைஞரும் இதுபோன்று சேர்க்க மாட்டார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், என் நண்பன் கலைஞர் பாணியை பின்பற்றி  சாகும் வரை பாமகவின் தலைவராக இருப்பேன் என்று ஓங்கி அடிக்கிறார். அவர்களது நட்பு என்பது 1995-1996 கால கட்டத்தில் ஏற்பட்டதுதான். அதன் பிறகு திமுகவோடு கூட்டணி வைத்திருந்த காலகட்டங்கள். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காதபோது ராமதாஸ் சென்று, அரசுக்கு ஆதரவு அளித்தார். ஆனால் பாமகவில் இருந்து திமுகவுக்கு வர விரும்பியவர்களை கலைஞர் சேர்க்கவில்லை. காரணம் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்தனர். 1996 கால கட்டத்தில் கூட்டணியில் பாமக இல்லை என்கிறபோது திமுகவில் சேர்த்தார்கள். பொதுவாக கூட்டணியில் உள்ள கட்சியினரை சேர்க்க மாட்டார்கள். அது மன வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் சேர்க்க மாட்டார்கள். அதை தாண்டி தான் ஸ்டாலின் அந்த முடிவுக்கு வந்துள்ளார்.

we-r-hiring

அப்படி என்றால் மதிமுக பொதுக்குழுவில் பேசப்பட்ட விஷயங்கள். அதற்கு வைகோ எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை. அதன் பிறகு துரை வைகோ நிறைவேற்றிய தீர்மானம் இவற்றுக்கு எல்லாம் அவர் மௌனமாக பதில் அளித்துள்ளார். திமுகவின் அமைப்பு பலம் என்பது, சட்ட விதிகள் மிகவும் தெளிவாக இருக்கும். ஒவ்வொரு செயற்குழு, பொதுக்குழுவிலும் தீர்மானங்களை சரியாக நிறைவேற்றுவார்கள். அந்த தீர்மானங்களை முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பார்கள். செம்மொழி நாளை முன்னிட்டு அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெறும் திமுக மாநாட்டில் நான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்ற உள்ளேன். அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களிடம், விருந்தினராக பங்கேற்ற எனது கையெழுத்தையும் பெற்றுக் கொண்டனர். திமுகவினர் எப்போதும் விதிகளின் படியே செயல்படுவார்கள்.

கூட்டணி வகைகளில் ஒன்று வழிச்சுமை கூட்டணி. அவர்களும் வாக்குகளை டிரான்ஸ்பர் செய்வார்கள். நாமும் வாக்குகளை டிரான்ஸ்பர் செய்யலாம். இருவருமே வெற்றி பெறலாம். திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி வழிச்சுமை கூட்டணியாகும். அவர்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கட்சி நிலாம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. நாளைக்கே அது அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வரும். இப்படி காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு அந்தஸ்து உள்ளது. ஆனால் வெறுமனே மாநில கட்சியாக இருக்கும் கட்சிகளுக்கு அதுபோன்ற அந்தஸ்து கிடையாது. வைகோ, துரை வைகோ போன்றவர்கள் சொன்னாலும், மதிமுகவுக்கு என்று எந்த அரசியல் அந்தஸ்தும் கிடையாது. அப்போது தமிழ்நாட்டில் என்ன வாக்கு பலம் உள்ளதோ, அதற்கு தகுந்தாற்போல் சீட்டுகள் வழங்கப்படுகிறது.

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது!

திமுக கூட்டணியில் இருந்து விலகினால், இழப்பு மதிமுகதான். அவர்கள் விஜயிடம் கூட்டணி செல்லும்பட்சத்தில்  சரியானதாக இருக்கும். பாஜக கூட்டணிக்கு சென்றால் அண்ணா, திராவிடம் போன்றவற்றை கைவிட வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகினால், அந்த இடத்தில் தேமுதிகவை வைத்து சரிகட்டலாம் என நினைக்கிறார்கள். குறிப்பாக தெலுங்கு வாக்கு வங்கியை கவர்வதற்கான அந்த கணக்கு போடப்படுகிறது. பவன் கல்யாணை கொண்டு வருவதும் தெலுங்கு வாக்கு வங்கிக்காக தான். ஆனால் எனக்கு இதில் நம்பிக்கை கிடையாது. தமிழ் வாக்கு வங்கி என்பது ஒருவருக்கு மட்டுமே கிடைக்காது. மொழிச் சிறுபான்மையினர் என்பதாலேயே ஒரு தலைவரின் பின்னால் மக்கள் அணிவகுத்து நிற்பார்கள் என்பது கிடையாது. மதிமுக விலகினால் அந்த இடத்தை தேமுதிகவை வைத்து ஈடுசெய்ய முடியுமா?  விஜயாந்தின் மறைவுக்கு பின்னர் தேமுதிகவுக்கு என்ன தொண்டர் பலம் உள்ளது என்ன என்பது கேள்விக்குறிதான். சில இடங்களில் அவர்களுக்கு வாக்கு வங்கி உள்ளது. தேமுதிகவுக்கு ஒரு அடையாளமாக இடம் தருவார்களே தவிர, மதிமுகவுக்கு கொடுத்தது போன்று தருவார்களா? என தெரியவில்லை.

பாமக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பது மிகவும் முக்கியமானதாகும். ராமதாசிடம் சமாதான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. மக்கள் எதிர்பார்ப்பது போல வித்தியாசமான கூட்டணி வரும் என்று ராமதாஸ் சொல்கிறார். அவர் கூட்டணி தொடர்பாக வெளிப்படையாக பேசவில்லை. மறைமுகமாக சில சமிக்ஞைகளை கொடுக்கிறார். நண்பர் கலைஞர் என்று சொல்கிறார்… இது ஒரு சமிக்ஞையாகும். அப்போது திமுகவும் அந்த கணக்கை எடுக்கும். ஒருவேலை பாமக, பாமக ராமதாஸ், பாமக அன்புமணி என்று உடைந்தால், ராமதாசுக்கு சட்ட ரீதியாக அதிக வாய்ப்புகள் உள்ளது. நிறுவனர் என்கிற முறையில் அவருக்கு சர்வ அதிகாரங்களும் உள்ளன. ஒருவேலை சட்டப்படி செல்கிறபோது கட்சி இரண்டாக உடையும். ஒருவேளை ராமதாஸ் பாமக என்றால், திருமாவளவனை மட்டும் தான் சமாதானம் செய்ய வேண்டும். விசிக ரவிகுமார் பேசுவதை பார்த்தால், அவர்கள் சமாதானம் ஆனது போல தான் உள்ளது. திருமாவளன் குறித்து ராமதாசும் மென்மையாக பேசுகிறார். அப்போது ராமதாசும் எதோ காம்ப்ரமைசுக்கு தயாராக உள்ளார் என்பது தெரிகிறது. அடுத்த அடுத்த நிகழ்வுகளை வைத்துதான் மதிமுக, திமுக கூட்டணியில் தொடர்கிறதா? என்பது தெரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்

MUST READ