Homeசெய்திகள்ஆவடிதிருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபம்.

திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபம்.

-

திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தை இடிக்க உத்தரவிட்டும் எந்தவித  நடவடிக்கையும் எடுக்காமல் திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது.

திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபம்.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த துர்கா என்பவருக்கு சொந்தமாக  DSG எனும் 2 அடுக்கு திருமண மண்டபம் உள்ளது.இந்த மண்டபம் முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து சமூக ஆர்வலர் ஒருவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள முதல் இரண்டாம் தளங்களை இடித்து அப்புற படுத்த வேண்டும் எனவும்,மேலும் அந்த இரு தளங்களிலும் எந்தவித நிகழ்ச்சிகளும் நடைபெறவும் தடை விதித்தனர்.

திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபம்.

இரண்டு தளங்களையும் 6 மாதத்திற்குள் இடித்து அகற்றி அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.  ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இரு தளங்களை இடித்து அகற்றாமல் நீதிமன்ற உதரவினை மதிக்காமல் அவமதிக்கும் வகையில் இருந்து வருகிறது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட மண்டப கட்டிடத்தினை அகற்ற வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருந்த அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

MUST READ