spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே BAG கடையில் பயங்கர தீ விபத்து

ஆவடி அருகே BAG கடையில் பயங்கர தீ விபத்து

-

- Advertisement -

ஆவடி அருகே BAG கடையில் பயங்கர தீ விபத்து

ஆவடி அருகே திருமுல்லைவாயில் BAG கடையில் பயங்கர தீ விபத்து.

we-r-hiring

திருமுல்லைவாயல் CTH பிரதான சாலையில் இந்தியன் வங்கி அருகில் கார்த்திக் என்பவர் AKM BAG வேர்ல்ட் எனும் பெயரில் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பைகள்,காலணிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

ஆவடி அருகே திருமுல்லைவாயில் BAG கடையில் பயங்கர தீ விபத்து.

வழக்கம் போல நேற்றிரவு வியாபாரம் முடித்துவிட்டு கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.

இன்று அதிகாலை வேளையில் கடையில் இருந்து கரும்புகை எழுவதை அவ்வழியே சென்றவர்கள் கவனித்துள்ளனர்.

பின்னர் கடையின் உள்புறதிலிருந்து தீ யானது கொழுந்து விட்டு ஏறிய துவங்கி உள்ளது.

ஆவடி அருகே BAG கடையில் பயங்கர தீ விபத்து

கடைக்குள் இருக்கும் 10 லட்சம் மதிப்புள்ள பைகள் காலணிகள் எல்லாம் தீயில் எரிந்து நாசமாகின, இதனால் அப்பகுதியில் வானுயர கரும்புகை எழுந்து காணப்படுகிறது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் காவல் துறைக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த ஆவடி,அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆளில்லாமல் பூட்டி கிடந்த கடையில் தீ பற்றியது குறித்தும் மின்கசிவினால் ஏற்பட்டதா அல்லது வேறு யாரேனும் தீயை பற்ற வைத்தார்களா என்ற கோணத்தில் திருமுல்லைவாயில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ