Homeசெய்திகள்ஆவடிஇயந்திர கோளாறால் ஆவின் பால் தட்டுப்பாடு

இயந்திர கோளாறால் ஆவின் பால் தட்டுப்பாடு

-

சென்னை அம்பத்தூர், ஆவடி போன்ற புறநகரில் ஆவின் பால் முறையான வினியோகம் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து (இன்று)மார்ச் 30 காலையில் வினியோகிக்க வேண்டிய பால் வினியோகிக்கவில்லை. அதனால் டீ, கடை முதல் ஆவின் பால் பயன் படுத்தும் குழந்தைகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயந்திர கோளாறால் ஆவின் பால் தட்டுப்பாடு

இதுகுறித்து ஆவின் அதிகாரிகளிடம் பேசும்போது,

இயந்திர கோளாறு காரணமாக அம்பத்தூர் பால்பண்ணையில் இருந்து சில தடங்களுக்கு பால் அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே, இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் (பொறியியல்) தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இயந்திர கோளாறால் ஆவின் பால் தட்டுப்பாடு

மேலும், தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் (தர உறுதி) காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், இயந்திர கோளாறு மற்றும் பால் அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இயந்திர கோளாறால் ஆவின் பால் தட்டுப்பாடு

உரிய நேரத்தில் பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொது மக்கள் பால் இல்லாமல் அவதிக்குள்ளானார்கள்.

MUST READ