இன்ஸ்ட்டா மோகத்தில் ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை உணராமலும் ரயில் நிலையத்தில் இளைஞர்கள் அட்டூழியம் செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளது.சென்னை அருகே ஆவடியில் இருந்து சென்னை நோக்கி பள்ளி, கல்லூரி,வேலைக்கு மின்சார ரயிலை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.இந்த நிலையில் இதில் பயணம் செய்யும் இளைஞர்கள் அடிக்கடி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று சில இளைஞர்கள் மின்சார ரயிலில் படியில் தொங்கியபடி கால்களை நடைமேடையில் பிற பயணிகளுக்கு தொல்லை தரும் வகையில் தேய்த்துக்கொண்டு பயணிகளுக்கும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கானா பாடலுடன் பதிவேற்றி உள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டு பிரபலம் அடைவதற்காக சில இளஞர்கள் ரயில்களில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் விபரீத செயலில் ஈடுபடுகிறார்கள்.

இதனால் அவர்களது உயிர்களுக்கு மட்டும் இன்றி, மற்றவர்களின் உயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது. ரயில்வே காவல்துறையினரும் இது போன்ற விபரீத சாகசத்தில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். எனினும் சிலர் இதனை மீறி இது போன்ற விபரீத சாகசத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அங்கேறுகின்றன. ரயில்வே போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.