Homeசெய்திகள்ஆவடிஆவடியில் புத்தகத் திருவிழா - அமைச்சர் சா.மு. நாசர்

ஆவடியில் புத்தகத் திருவிழா – அமைச்சர் சா.மு. நாசர்

-

திருவள்ளூர் மாவட்டத்தில் 2வது புத்தகக் கண்காட்சி வரும் 17ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.

புத்தக திருவிழா

இது குறித்து அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆண்டு தோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலாவது புத்தக கண்காட்சி கடந்த 2022 ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் உடன் இணைந்து 17.03.2023 முதல் 27.03.2023 வரை 11 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளது.

ஆவடியில் புத்தக திருவிழா - அமைச்சர் சா.மு. நாசர்

ஆவடி HVF மைதானத்தில் நாள்தோறும் காலை 11.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 100 அரங்குகளில் 10,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இக்கண்காட்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் 10 ரூபாய் முதல் 1000ரூபாய் வரை மதிப்பிலான புத்தகங்கள் ஒரே கூரையின்கீழ் குவிக்கப்பட உள்ளது. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து புத்தகங்களுக்கும் புத்தக விலையில் 10 சதவீதம் தள்ளுபடி செய்து வழங்கப்பட உள்ளது.

ஆவடியில் புத்தக திருவிழா - அமைச்சர் சா.மு. நாசர்

நாள்தோறும் இக்கண்காட்சியில் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

MUST READ