Homeசெய்திகள்ஆவடிஆவடி காவல் ஆணையர்- பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாம்

ஆவடி காவல் ஆணையர்- பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாம்

-

காவல் ஆணையர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

ஆவடி காவல் ஆணையர்- பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாம்ஆவடி அடுத்து திருமுல்லைவாயல், எஸ்.எம்.நகரில் உள்ள ஆவடி போலீஸ் கன்வென்சன் சென்டரில், காவல் ஆணையர் சங்கர் தலைமையில், 13-வது வாரமாக நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட 26 மனுக்கள், ஆன் லைன் மூலம் பெறப்பட்ட 23 மனுக்கள், நிலுவையில் இருந்த 69 மனுக்கள் உட்பட 118 மனுக்களில் 109 மனுக்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதேபோல், பொதுமக்களிடம் இருந்து புதிதாக 45 மனுக்கள் பெறப்பட்டு அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண ஆணையர் உத்தரவிட்டார்.

இம்முகாமில், ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் உள்ள 25 காவல் நிலையங்களின் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், போலீசார் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆவடி காவல் ஆணையர்- பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாம்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தொடர்ந்து வாராவாரம் புதன்கிழமைகளில் நடைபெறும்.மேலும் இம்முகாம் மூலம் பொதுமக்களின் புகார்கள் ஏற்கப்பட்டு தொடர்ந்து காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. மேலும் ஆவடி காவல் ஆணையரகம் குற்றங்களை தடுத்து,சிறப்புமிக்க மற்றும் பாதுகாப்பு மிக்க மாநகரமாக தொடர்ந்து செயல்படும் என ஆணையர் சங்கர் தெரிவித்தார்.

MUST READ