Homeசெய்திகள்ஆவடிஆவடி அறிவுசார் மையம் முன்பு குளம்போல் தேங்கும் மழைநீர்! பொதுமக்கள், மாணவர்கள் அவதி – மாநகராட்சி...

ஆவடி அறிவுசார் மையம் முன்பு குளம்போல் தேங்கும் மழைநீர்! பொதுமக்கள், மாணவர்கள் அவதி – மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

-

- Advertisement -

ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஆவடி மாநகராட்சியின் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் முன்புள்ள சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்களும் மாணவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஒவ்வொரு மழைக்கும் தொடரும் அவலம்

நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு வரும் மாணவர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மழை பெய்யும்போதெல்லாம் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அவர்கள் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

மழைநீர் வடிந்து செல்ல போதிய வசதி இல்லாததால், சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்குவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதே நிலை தொடர்வதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் சிரமத்தைப் போக்க ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சாலையில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதியைச் சீரமைத்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

‘லஞ்சம் வாங்க மாட்டேன்… வேலையும் செய்ய மாட்டேன்!’ – ஆவடி மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்குவதில் TPO அடாவடி? ஸ்தம்பிக்கும் பணிகள், தவிக்கும் பொதுமக்கள்!

MUST READ