Homeசெய்திகள்ஆவடிசென்னை - அரக்கோணம் மார்க்கம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை – அரக்கோணம் மார்க்கம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு

-

ஆவடி அருகே இந்துக்கல்லூரி பட்டாபிராம் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு.

சென்னை - அரக்கோணம் மார்க்கம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை மற்றும் அரக்கோணம் மார்க்கம் ரயில் போக்குவரத்தில் 45 நிமிடம் கால தாமதம். ரயில் பயணிகள் பெறும் அவதி.

ஆவடி, திருவள்ளூர், சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழைப்பொழிவு காணப்பட்டது ஆவடி அருகே பட்டாபிராம் இந்துக் கல்லூரி இடையே திடீரென (PTMS) பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரயில் பாதையில் செல்ல கூடிய தண்டவாள பகுதியில் மழை காரணம் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது.

சென்னை - அரக்கோணம் மார்க்கம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கியும் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கியும் இரு மார்க்கத்தில் வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் ரயிலில் இருந்து கிழே குதித்து பஸ், ஆட்டோக்களில் அவர்களது பயணத்தை மேற்கொண்டனர்.

சென்னை - அரக்கோணம் மார்க்கம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுது பார்த்தல் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே ரயில்கள் இந்து கல்லூரி,பட்டாபிராம், திருநின்றவூர்,ஆவடி, போன்ற பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால்  இரவு சுமார் 7.55 மணி முதல் 8.40 மணி வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு தாமதமானது.

இதனிடையே பழுது சீர்செய்யப்பட்ட பிறகு மின்சார ரயில் போக்குவரத்து சீரானது. மின்சார ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

MUST READ