Homeசெய்திகள்ஆவடிஆவடியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஆவடியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

-

ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட விளிஞ்சியம்பாக்கம் பாரதிதாசன் நகர் பொதுமக்கள்

ஆவடியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் (எண்.5). பாரதிதாசன் நகரில் வசிக்கும் பெரும்பான்மையான வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் உட்பட 172 குடும்பங்கள் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்து காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் திரு. பக்தவச்சலம் அவர்களால் இம்மக்களுக்கு 1965ல் பட்டா வழங்கப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை 90 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

வருவாய்துறை சுமார் 60 குடும்பங்களுக்கு 14.09.1965 ஆம் ஆண்டு இம்மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கியுள்ளது. தற்போது 172 குடும்பங்கள் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தால் குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை, தெருவிளக்கு மற்றும் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட மேம்படுத்தப்பட்ட ஒரு பகுதியாக விளிஞ்சியம்பாக்கம் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10.12.2023 அன்று திடீரென்று வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை ஆகியோரால் 10க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டு, குடியிருப்பு வீடுகளையும் இடித்து அப்புறப்படுத்த முயற்சிப்பது அங்கு வாழும் மக்கள் பெருத்த அச்சத்துடனும், அதிர்ச்சியுடனும் உள்ளனர். மாணவர்கள் அரையாண்டு தேர்வு எதிர்கொள்ளும் நிலையில் வீட்டில் நிம்மதியாக படிக்க முடியாத அச்சத்தை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

90 ஆண்டு காலமாக வாழும் மக்களின் வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்திடக்கோரி ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் விளிஞ்சியம்பாக்கம், பாரதிதாசன் நகர் பொதுமக்கள்,தமிழ்நாடு வேட்டைக்காரன்,பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தற்போது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தலைமையேற்று தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநிலச் செயலாளர் கெங்காதுரை மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆவடியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

இதுகுறித்து டில்லிபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது :தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் கூறியது, தமிழக முதலமைச்சர் நேரடி பார்வையிட்டு விளிஞ்சியம்பாக்கம் பாரதிதாசன் பாரதிதாசன் நகர் 172 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இவர்களுக்கான தீர்வை வழங்கிட வேண்டும். இல்லையேல் இப்போராட்டம் மிகப்பெரிய அளவில் மீண்டும் அறிவிப்பில்லாமல் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டார்.

MUST READ