spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிபேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி.... பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் :

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி…. பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் :

-

- Advertisement -

ஆவடியிலிருந்து ஆரணி செல்லும் பேருந்துகள் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி.... பனிமரை நிர்வாக மேலாளரிடம் புகார் :

ஆவடிக்கு அருகிலுள்ள திருநின்றவூர் வச்சாலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். கடந்த ஞாயிறு கிழமை மாலை 4 மணியளவில் ஆரணி செல்வதற்காக ஜெயா கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.. அப்பொழுது அவ்வழியாக ஆரணிக்கு செல்லும் 580 வழித்தடம் பேருந்து,நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.. அதனை கண்ட பெரியவர் தனது மகனை வரவழைத்து ஆட்டோவில் பேருந்தை தொடர்ந்து சென்றனர்.

we-r-hiring

வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்ட விரோதமானது

மூன்று நிறுத்தங்களில் நிற்காமல் சென்ற பேருந்து பாலாஜி நகர் நிறுத்தத்தில் நின்றது..உடனே பெரியவர் பேருந்து ஓட்டுநரிடம்,கண்டக்டரிடம் சென்று ஏன் பேருந்தை நிறுத்தவில்லை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பெரியவர் என்று பார்க்காமல் ஓட்டுனரும், கண்டக்டரும் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது.. உடனே அவர் பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்….

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி.... பனிமரை நிர்வாக மேலாளரிடம் புகார் :

இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபொழுது, இது போன்ற பல பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதும் அதனால் பயணிகள் அவதியக்குள்ளாகியதுமாக கூறினர். மேலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கபடுவதால் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்… மேலும் ஆவடி நகராட்சி பேருந்துகள் அனைத்தும் சுத்தம் செய்யாமல் இருக்கப்படுவதாகவும் அதனால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக பனிமனை நிர்வாக மேலாளர் உறுதியளித்தார்.

MUST READ