Homeசெய்திகள்ஆவடிஆவடியில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி!

ஆவடியில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி!

-

ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஷ வாயுத்தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்

ஆவடி அடுத்த ஜே.பி. எஸ்டேட் பகுதி சரஸ்வதி நகர் குறிஞ்சி தெருவில் அமைந்துள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததை சரி செய்யும் பணியில் ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 4 நபர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பணியில் ஆவடி அருந்ததிபுரம் பகுதியை சேர்ந்த கோபிநாத் (25) பாதாள சாக்கடைக்குள் இறங்கி சரி செய்துகொண்டிருக்கும்போது விஷ வாய்வு தாக்கியது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோபிநாத் பாதாள சாக்கடைக்குள் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து ஆவடி தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் மயங்கி விழுந்தவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்சில் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கோபிநாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


தகவலின் பேரில் வந்த ஆவடி போலீசார், கோபிநாத் மரணம் தொடர்பாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். ஆவடி சுற்றுப்பகுதியில் இதுபோல் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழப்பது வாடிக்கையான விஷயமாக உள்ளதை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

MUST READ