spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிசி.வி.ஆர்.டி.இ-ன் 48வது வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

சி.வி.ஆர்.டி.இ-ன் 48வது வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

-

- Advertisement -

ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (CVRDE) 48வது வளர்ச்சி நாளைக் (Raising Day) 15th ஏப்ரல் 2023 அன்று கொண்டாடியது.

டி.ஆர்.டி.ஓ.வின் (DRDO) கீழ் இயங்கும்  போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வயர்ச்சி நிறுவனம்  (CVRDE) உருவாக்கிய லேண்டிங் கியர் சீல் ஷாஃப்ட் (landing gear seal shaft ) முன் தயாரிப்பு (pre -production) மற்றும் அதன் 48வது ஆண்டு வளர்ச்சி நாள்  கொண்டாடப் பட்டது.

we-r-hiring

விழாவிற்கு DRDO செயலாளர் டாக்டர் சமீர் வி.காமத் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில்  ”ATMA NIRBHAR BHARAT” திட்டத்தின் கீழ் விமான தொடர்புடை  சில தயாரிப்புகள் ஒப்படைக்கப்பட்டன.

லேண்டிங் கியர் சீலின் ஷாஃப்ட்

 

உள்நாட்டு விமானத்தின் வடிவமைப்பு, தரமான தாங்கு உருளைகள் (BEARINGS) மேம்பாடு

AMAGB தாங்கு உருளைகள் LCA TEJAS – ன் உற்பத்தித் தொடரில் பயன்படுத்த HALக்கு ஒப்படைக்கப்பட்டது. LCA TEJAS விமான சோதனைகள் ஏற்கனவே முடிந்துவிட்டன மற்றும் உற்பத்தி அனுமதியை CEMILAC (ஏரோ இந்தியா-2023-ன் போது மாண்புமிகு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் ஒப்படைக்கப்பட்டது) வழங்கியது.

தயாரிப்புகள் ஒப்படைக்கப்பட்டன

CVRDE, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து வான்வெளி தாங்கி தொழில்நுட்பத்தில் LCA TEJAS – ன் அதிவேக, உயர் துல்லிய, விமானத் தர தாங்கு உருளைகளை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. PTO Shaft ற்கான LCA Tejas விமான அனுமதிச் சான்றிதழை CEMILAC CVRDE க்கு ஒப்படைத்துள்ளது. மேலும் HAL நிறுவனம் விமான சோதனைகளுக்கு வழிவகை செய்கிறது.

உள்நாட்டு பவர் டேக் ஆஃப் (Power Take Off ) ஷாஃப்ட்- ஐ சிவிஆர்டிஇ, டிஆர்டிஓ ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு, தனித்துவமான புதுமையான காப்புரிமை பெற்ற “Frequency Spanning Technique” மூலம் உருவாக்கப்பட்டது.

CEMILAC, ஏரோநாட்டிக்கல் பயன்பாட்டிற்கான லேண்டிங் கியர் சீலின் முன் தயாரிப்புக்கான அனுமதியை CVRDE மற்றும் M/s Fluro Carbon seals, Chennai  நிறுவனத்திற்கு வழங்கியது.

CVRDE யினால் மேம்படுத்தி, தகுதிபெற்ற தரையிறங்கும் கியர் அமைப்புகளை TAPAS மற்றும் SWIFT UAVகளுக்கு வெற்றிகரமாக வடிவமைத்து வழங்கியுள்ளது.

MUST READ