Homeசெய்திகள்ஆவடிவெள்ள அபாய எச்சரிக்கை – இன்று மாலை புழல் ஏரி திறப்பு!

வெள்ள அபாய எச்சரிக்கை – இன்று மாலை புழல் ஏரி திறப்பு!

-

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியாகும். இன்று (29.11.2023) நீர் இருப்பு 19.25 அடியாகவும் கொள்ளளவு 2862 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழையினால் நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் புழல் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை – இன்று மாலை புழல் ஏரி திறப்பு!

தற்போது நீர் வரத்து விநாடிக்கு 570 கன அடியாக உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து இன்று (29.11.2023) மாலை 4.00 மணி அளவில் விநாடிக்கு 200 கனஅடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. மேலும், ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை – இன்று மாலை புழல் ஏரி திறப்பு!

எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை – இன்று மாலை புழல் ஏரி திறப்பு!

மாவட்ட ஆட்சியர்,

திருவள்ளூர் மாவட்டம்,

திருவள்ளூர்.

MUST READ