spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை

ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை

-

- Advertisement -

ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை

ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள காமராஜர் நகர், இந்துக்கல்லூரி, பட்டாபிராம், கோவில் பதாகை, திருமுல்லைவாயல், அண்ணனூர், ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழைபூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்துடன் செல்கின்றனர்.

we-r-hiring

ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழைமாலை நேரம் என்பதால் பள்ளி கல்லூரி விட்டு செல்லும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்லும் நிலை, மழையின் காரணமாக தாமதம் ஆகிறது.
தற்போது பெய்த மழைக்கே சாலையில் நீர் தேங்கி நிற்கிறது. இனிவரும் பருவ மழைக்காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்காமல் இருக்க மழை
நீர்வடிகால்களை அமைத்து மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க ஆவடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ