நடப்போம் நலம் பெறுவோம்-ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நலவாழ்வு குறித்த விழிப்புணர்வு

நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பேணுவதற்கான நடைபயிற்சியை (Health Walk) ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி உடற்பயிற்சி செய்வது நீரிழிவு மற்றும் இரத்த அழுந்த நோய்களின் தாக்கம் 28 சதவீதமும் (இதய நோயின் தாக்கம் 30 சதவீதமும் குறைகின்றது. என்று அறியப்படுகின்றது. நடைப்பயிற்சியானது மக்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும் நாள்பட்ட உடல் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்பதற்கு இணங்க பொது மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 8 கிலோ மீட்டர் தூரம்’ கொண்ட நடைபாதை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடைபாதையானது 4 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுத்திப்பட்டு பசுமை பூங்காவில் 2 முழு சுற்றுகள் சுற்ற 8 கிலோ மீட்டர் தூரம் தொடங்கிய இடத்திலே முடிகின்றது.
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறுக்கிழமை உள்ளூர் மக்களுடன் இணைந்து நடைப்பயிற்சி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகிய அனைவரும் சுகாதார நடைபயிற்சியில் பங்கேற்பார்கள். நடைப்பயிற்சியின் முடிவில் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நலவாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் மற்றும் தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும்.
இதற்கான துவக்க விழா 04.11.2023 அன்று காலை 6.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் அவர்களால் காணொளி மூலம் சென்னையில் துவக்கி வைக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மேலும் நடைப்பயணம் (Health Walk} ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவில் துவக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.