Homeசெய்திகள்ஆவடிஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலை-மழை காலம் என்பதால் வாகன ஓட்டிகள் அவதி

ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலை-மழை காலம் என்பதால் வாகன ஓட்டிகள் அவதி

-

ஒரு மாதத்திற்கு மேலாகியும் சாலை அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி.மழை காலம் என்பதால் சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலை

ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலை-மழை காலம் என்பதால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய், புதிய சாலைகள் மற்றும் சிதிலமடைந்த சாலைகள் சீரமைத்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது..இந்த நிலையில் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் பிரதான சாலையில் சிதிலமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி மற்றும் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.. இதன் தொடர்ச்சியாக ஆவடி மேயர் உதயகுமாரின் வார்டுக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக சாலையில் ஒரு பகுதியில் ஒன்றரை அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.

ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலை-மழை காலம் என்பதால் வாகன ஓட்டிகள் அவதி

இதனால் ஒரு வழி பாதையாக வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் நிலையில் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.பிரதான சாலை என்பதால் பள்ளி கல்லூரி வேலைக்கு செல்வோர் ஒரு வழி பாதையில் கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலை-மழை காலம் என்பதால் வாகன ஓட்டிகள் அவதிஒரு மாதம் காலம் ஆகியும் பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி
மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிவரும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து விபத்து நடைபெறும் சூழல் நிலவி வருவதால் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சிமெண்ட் சாலையை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

MUST READ