Homeசெய்திகள்ஆவடிநோபல் உலக சாதனை படைத்த சமத்துவ பொங்கல்

நோபல் உலக சாதனை படைத்த சமத்துவ பொங்கல்

-

- Advertisement -

அயப்பாக்கம்  5000 பெண்கள் இனைந்து 1500 பானைகள் வைத்து சமத்துவ பொங்கல்

ஆவடி அடுத்த அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி பேரறிஞர் அண்ணா எழில்மிகு பசுமை பூங்காவில் மிக கோலாகலமாக கொண்டாடபட்ட 5000 பெண்கள் இனைந்து 1500 பானைகள் வைத்து சமத்துவ பொங்கல் நோபல் உலக சாதனை படைத்துள்ளனர்.

நோபல் உலக சாதனை படைத்த சமத்துவ பொங்கல்

முன்பதாக நோபல் சாதனை படைக்க 1009 பானைகள் வைத்து 3000 பெண்கள் இனைந்து பொங்கல் வைப்பதாக பதிவு செய்யபட்டிருந்தது.ஆனால் சாதனை எண்ணிக்கையை கடந்து, 5000 பெண்கள் இனைந்து 1500 பானைகள் கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டமைப்பு, MKS அகாடமி,இயல் இசை நாடக மன்றம், லயன்ஸ் கிளப் அயப்பாக்கம் ஆகியோர் புது நோபல் உலக சாதனையை படைத்துள்ளது.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, மதுரவாயல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி, திரைப்பட இயக்குனர் மாரிசெல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நோபல் உலக சாதனை படைத்த சமத்துவ பொங்கல்

இதனை தொடர்ந்து கோல போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற 600 பெண்களுக்கு பரிசு பொருட்கள், நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்.பாலு மற்றும் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ், அயப்பாக்கம் ஊராட்சி மன்ற
தலைவர் துரை வீரமணி ஆகியோரால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு இன்று 5000 பெண்கள் 1500 பானைகள் கொண்டு வைத்த சமத்துவ பொங்கல் நோபல் உலக சாதனை படைத்து பதிவு எண் 3089-ல் இன்று பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ