Homeசெய்திகள்ஆவடிபட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டு

பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டு

-

பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டு

ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரத்தில் 110 / 11 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 16000 கிலோ வாட் திறன் கொண்ட மூன்று மின் மாற்றிகள் உள்ளன.

பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டு

இங்கிருந்து பட்டாபிராம், சேக்காடு, தண்டரை, கண்ணப்பாளையம், ஆவடி காமராஜர் நகர், பருத்திப்பட்டு மற்றும் மேல்பாக்கம் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி நள்ளிரவு, மின் கட்டுப்பாட்டு கேபிளில், மின்கசிவு காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 16000 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு மின்மாற்றிகள் தீக்கிரையானது. இதனால், மேற்கூறிய பகுதிகளில் உள்ள 46,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. பொதுமக்கள் உஷ்ணத்தால் கடும் அவதியடைந்தனர்.

பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டு

இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட மின்மாற்றி பொருத்தப்பட்டன. இருப்பினும் கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்சனையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தீ விபத்தில், மின்மாற்றி நிறுவப்படும் கான்க்ரீட் தரை முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பணிகள் முடிந்ததும், மூன்றாவது மின்மாற்றி பொருத்தும் பணி நடைபெறும்’ என்று கூறினார்.

இந்நிலையில், மூன்றாவது மின்மாற்றி பொருத்தும் பணி மற்றும் சீரமைப்பு பணிக்காக, நாளை காலை 9:00 மணி முதல் முற்பகல் 12:00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டு

இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், மேற்கண்ட பணிக்காக பட்டாபிராம், தண்டரை, ஐயப்பன் நகர், சேக்காடு, கோபாலபுரம், தென்றல் நகர், முல்லை நகர், பட்டாபிராம் தெற்கு பஜார், வள்ளலார் நகர், வேங்கடபுரம், சென்னை — திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, சார்லஸ் நகர், அண்ணா நகர், டிரைவர்ஸ் காலனி, மாடர்ன் சிட்டி, காமராஜபுரம், சாஸ்திரி நகர், ஐ.ஏ.எப்., சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

MUST READ