மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக ஆவடி சுற்று வட்டார பகுதியில் நாளை மின்தடை என மின்சார வாரியத் தறை அறிவித்துள்ளது.
நாளை (22-08-2024) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 33/11 கே.வி காமராஜ் நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை பகுதிகள்:
தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம், காமராஜ் நகர், ஆவடி மார்கெட், அண்ணாமலை நகர், கௌரி பேட்டை, ஜே.பி.எஸ்டேட், வசந்தம் நகர், கோவர்த்தனகிரி நகர், பருத்திப்பட்டு மற்றும் சுற்றி உள்ள பகுதிகள்.