Homeசெய்திகள்ஆவடிதொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்

தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்

-

ஆவடி போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்தார்.

தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்

 

ஆவடி அருகே முருகப்பா குரூப் ட்யூப் ப்ராடக்ட்ஸ் ஆப் இந்தியா தனியார் நிறுவனம் இயங்கி கொண்டு வருகிறது.இதில் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை பகுதி நேரமாக 5000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.தொழிற்சாலையில் பணியாற்றும் தமிழ்நாடு மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஆண், பெண், அனைத்து தொழிலாளர்களையும் அழைத்து ஒரே இடத்தில் ஒன்று கூட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் மற்றும் விதிமுறைகளை கடைப்பிடித்தல் குறித்தும் ஆய்வாளர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

இதில் அவர் கூறியது சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி செல்லும் பொழுது கட்டாயம் தலை கவசம் அணிய வேண்டும் என்றும், அதேபோல் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், அதேபோல் சாலைகளில் குறுக்கே கடந்து செல்லும் பொழுது இரு புறமும் வாகனங்கள் வருகிறதா என்று நன்கு கவனித்துச் செல்ல வேண்டும் என்றும், அதேபோல் போக்குவரத்து சிக்னல் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனத்தில் செல்வர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், வாகனங்கள் ஒட்டி செல்லும் பொழுது அளவுக்கதிகமான வேகத்தில் ஓட்டக்கூடாது என்றும், அரசு நிர்ணயித்த வேக கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் இந்த விழிப்புணர்வு குறித்து அங்கு கூடியிருந்த வட இந்திய தொழிலாளர்களுக்கும் தமிழ் தொழிலாளர்களுக்கும் புரியும் விதமாக தமிழிலும் இந்தியிலும் உரையாடி விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து தொழிலாளர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிவோம்,சாலை விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், விஜிராய் மற்றும் சக போக்குவரத்துக் காவலர்களும் உடன் இருந்தனர்.

MUST READ