Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை - பக்தர்கள் சாமி தரிசனம்

ஆவடி அருகே ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை – பக்தர்கள் சாமி தரிசனம்

-

- Advertisement -

ஆவடி அருகே கவரப்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆவடி அருகே ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை - பக்தர்கள் சாமி தரிசனம்வருடா வருடம் திருப்பதி குடை கேசவபெருமாள் கோயிலிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு  திருமலையில் நடைபெறும் கருட சேவையின் போது இந்த திருகுடைகள் சாமிக்கு அர்ப்பணிப்பது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு திருப்பதியில்  நடைபெறும் பிரம்மோர்ச்சவ திருவிழா துவங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், 5 வது நாள் நடைபெறும் கருட உச்சவத்தின்போது உற்சவருக்கு முன்னும்,பின்னும் இந்த குடைக்குள் எடுத்துச் செல்லப்பட்டு அலங்கரிக்கப்படும், குடைகள் பலநூறு ஆண்டுகளாக சென்னை சௌகார் பேட்டையை ஒட்டியுள்ள,சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் தயாரிக்கப்பட்டு இந்த திருகுடைகள் வழிவழியாக கொண்டு செல்வது வழக்கம்.

ஆவடி அருகே ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை - பக்தர்கள் சாமி தரிசனம்இந்த நிலையில் கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு சென்னை மாநகரில் வளம்வந்து, குடைகள் இன்று அம்பத்தூர் வழியாக ஆவடி அருகே கவரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு வருகை தந்தது.

ஆவடி அருகே ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை - பக்தர்கள் சாமி தரிசனம்இதனை ஒட்டி ஆவடி கவரப்பாளையம் பகுதி திருமலை திருப்பதி திருக்குடை பொறுப்பாளர் ஆர் கோதண்டன் சிறப்பான வரவேற்பு அளித்தார் பின்பு கவரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் பெருமாள் ஆண்டாள் சுவாமிகளுக்கு பல்வேறு  மூலிகை திரவியங்கள் கொண்டு பல்வேறு அபிஷேகங்கள் துளசி மற்றும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களுக்கு நெய்வேத்தியத்துடன் தீபாரதனை காட்டப்பட்டன பின்பு திருப்பதி கொடை தலைமை ஏற்று நடத்தும்  ஆர்.ஆர்.கோபால்ஜி அவர்களுக்கு ஆலய நிர்வாகிகள் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டன.

ஆவடி அருகே ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை - பக்தர்கள் சாமி தரிசனம்ஆலயத்திற்கு வந்த திருப்பதி குடையை பக்தர்கள் கோவிந்த கோவிந்தா என்று முழக்கமிட்டு திரு குடைகளுக்கும் பெருமாள் சாமிக்கு சமர்ப்பிக்கும் பாதாணிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து  வழி அனுப்பினர்.இந்த திருக்குடை ஊர்வலம் பட்டாபிராம் திருநின்றவூர் திருவள்ளூர் வழியாக அக்டோபர் 7ம் தேதி திருமலையை சென்றடையும் திரு‌ப்ப‌தி குடை ஊ‌ர்வல‌த்‌தி‌‌ன்போது அனைத்து பக்தர்களுக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

MUST READ