சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எப்போதும் சொல்வதை செய்யும் அரசாக திராவிட அரசு உள்ளது என்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் அடுத்த மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளாா்.சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எப்போதும் சொல்வதை செய்யும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. சென்னை மற்றும் புறநகாில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளாா். வட சென்னையில் விரைவில் 18 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது என்றும் அறிவித்துள்ளாா்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர அடுத்த மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா். தமிழக மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த சில குடும்பத் தலைவிகள் இன்னும் இதில் இணையாமல் உள்ளனர். இந்நிலையில் மாதம் ரூ.1000 கிடைக்காத பெண்கள், எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஜூன் மாதம் 4-ம் தேதி மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இத்திட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு சென்னையில் இன்று பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம்கள் எங்கெங்கு நடத்த வேண்டும் என்ற விவரங்களும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளாா்.
தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு – கோவை மகிளா சிறப்பு நீதிமன்றம்!
