சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘Gen Z திமுக’ என்ற தலைப்பில் இளம் தலைமுறையினருக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட Gen Z தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற GEN Z திமுக என்னும் தலைப்பில், இளம் தலைமுறையினரின் அரசியல் பங்களிப்பு, சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மத்தியில் அரசியலின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பல்வேறு துறைகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் சிறப்புரைகளையும் வழங்கினர்.
குறிப்பாக, ‘சமூக வலைதளங்களில் களமாடுவோம்’, ‘ஏ.ஐ. யுகத்தில் இன்றைய அரசியல்’ உள்ளிட்ட தலைப்புகளில் இளைஞர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். சமூக ஊடகங்களை திறம்பட பயன்படுத்தி மக்களுடன் தொடர்பு கொள்ளும் முறைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அரசியல் மற்றும் நிர்வாகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இளம் தலைமுறையினரின் அரசியல் விழிப்புணர்வை மேம்படுத்தவும், புதிய தலைமுறையின் சிந்தனைகள் மற்றும் கருத்துகளை அறிந்து கொள்ளவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள், அரசியல், சமூக மாற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான தங்களது பார்வைகளை பகிர்ந்து கொண்டு உற்சாகமாக கலந்துரையாடினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இந்த ‘Gen Z திமுக’ சந்திப்பு, இளம் தலைமுறையினரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
சென்னை பயணிகள் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் 5 வரை 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம்
