முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான நடைபயிற்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜாவை கட்சியில் சேர்த்த நிகழ்வுக்கு பிறகு முதலமைச்சர் மருத்துவமனைக்கு சென்றார்.
மேலும், இரண்டுநாட்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவா்கள் முதல்வருக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளனா். முழுமையான சோர்வு நீங்கும் வகையில் மன-உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் விரைவில் மீண்டும் தனது அரசு பணிகளுக்குத் திரும்புவார் என அரசுமட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர்-ஐ விஞ்சியவர்! கலைஞர் அஞ்சியவர்! வைகோ யார் தெரியுமா?
