Homeசெய்திகள்சென்னைபரப்புரைக்கு முன்பணம்… விதிகளை வகுக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம்…

பரப்புரைக்கு முன்பணம்… விதிகளை வகுக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம்…

-

- Advertisement -

பொதுக்கூட்டம், பேரணிக்கு முன்பணம் வசூலிப்பது தொடர்பாக விதிகளை வகுக்கக் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.பரப்புரைக்கு முன்பணம்… விதிகளை வகுக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம்…பொதுக்கூட்டம், பேரணிக்கு அனுமதி கோருபவர்களிடம் இழப்பீட்டுக்கான முன்பணம் வசூலிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு அக்டோபா் 16 வரை சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியது. பொதுக்கூட்டம், பேரணிக்கு அனுமதி கோருபவர்களிடம் இழப்பீட்டுக்கான முன்பணம் பெற சட்டத்தில் இடமில்லை என காவல்துறை தரப்பில் வாதிட்டனர். “மனம் இருந்தால் அரசு இதனை செய்யலாம், அசம்பாவிதம் நடைபெறவில்லை என்றால் திருப்பி கொடுத்துவிடலாமே?” என நீதிபதி சதீஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளாா். பரப்புரைக்கு பாரபட்சமின்றி பரிசீலித்து அனுமதி தர வேண்டும் என த வெ க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

MUST READ