spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

-

- Advertisement -

சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

ஊழல் வழக்கில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கடும் பதற்றம் : தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்  நிறுத்தம் | | Dinamalar

சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் பொருளாதாரக் குற்றங்கள் தடுப்புப் பிரிவு போலீசாரால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்தியாலா டவுன் பகுதியில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

we-r-hiring

Image

இந்த நிலையில் ஆந்திராவில் பதட்டமான சூழல் நிலவுவதால், சென்னை மாதவாரத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக தினந்தோறும் இயக்கப்படும் 60 தமிழக பேருந்துகளும், 140 ஆந்திர பேருந்துக சேவைகள் காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் பதட்டமான சூழல் தணிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பு இரு மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளின் மறு உத்தரவு வந்த பிறகு மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ