விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகளை பின்பற்றுவதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பி.தாமஸ் என்பவர் வழக்கு தொடா்ந்திருந்தாா். பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும், வெவ்வேறு காரணங்களை கூறி, அவற்றை நிறைவேற்ற தவறியதாக சென்னை மாநகராட்சி ஆணையர், கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்க்கொண்டாா். வழக்கில் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோாினா். ஆக்கிரமிப்பாளருக்கு அனைத்து வாய்ப்புகளை வழங்கியும், மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாகவும், செயலற்றும் இருந்துள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
விதிமீறல் கட்டடத்தை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளதால், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை, என தலைமை நீதிபதி ஸ்ரீ வத்ஸவா அமர்வு வழக்கை முடித்து வைத்தது.
தனியாருக்கு தூய்மை பணிகள் வழங்கும் தீர்மானம்…நீதிபதி ரத்து செய்ய முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்
