ஐஸ்கிரிம் கேக்கை கூடுதல் விலைக்கு விற்ற zomoto, havmor ஐஸ்கிரிம் நிறுவனங்கள் மீது புகார் அளித்த வாடிக்கையாளருக்கு 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், அண்ணாநகரில் உள்ள பிரபல ஹவ்மோர் ஐஸ்கிரிம் நிறுவனத்தின் இருந்து Zomoto ஆன் லைன் ஆப் மூலமாக கடந்த 2023 ம் ஆண்டு ஐஸ்கிரீம் கேக் கூடுதல் விலைக்கு தன்னிடம் விற்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
500 ml கொண்ட அந்த ஐஸ்கீரிம் கேக்கின் நிர்ணயிக்கப்பட்ட விலை 300 ரூபாய் என அதன் விலை குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் டெலிவரி செய்த zomoto நிறுவனம் 1182 ரூபாயை வசூலித்தாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது தொடர்பாக zomoto நிறுவனத்திற்கு புகார் அளித்தும் கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப வழங்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட ஐஸ்கிரிம் நிறுவனமும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மட்டுமே ஐஸ்கீரிம் கேக்கை zomoto நிறுவத்திற்கு வழங்கியதாக தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், கவிதா கண்ணன் அமர்வு, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்து முறையற்ற வணிகத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் எனக்கூறி, zomoto நிறுவனம், ஹவ்மோர் ஐஸ்கீரிம் நிறுவனம் ஆகியோர் வாடிக்கையாளருக்கு மன உலைச்சலை ஏற்படுத்தியதற்காக 5 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 2 ஆயிரம் ரூபாய் என பெரோஸ்கானுக்கு மொத்தம் 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.2 மாதத்தில் இந்த தொகையை வழங்கவில்லை என்றால் இந்த தொகையை 9% வட்டியுடன் புகாருக்கு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
80 சவரன் நகை 38 லட்சம் பணம்…பேராசையால் பறிகொடுத்த மருத்துவரின் மனைவி


