Homeசெய்திகள்சென்னைகிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது - திமுக எம்.பி.வில்சன்

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

-

- Advertisement -

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம், ஏற்கனவே வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அவர்கள் சொத்துகளை அடித்து பிடிங்கியது போல் இப்போது கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று திமுக எம்.பி.வில்சன் தெரிவித்துள்ளார்.கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே  FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது - திமுக எம்.பி.வில்சன் சென்னை, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்ட ஆலோசகரும்,  வழக்கறிஞருமான வில்சன் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் ( FCRA )  என்ற மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சட்டத்தால் நாடே கொந்தளிப்பில் உள்ளது.

லைசன்ஸ் பெறாமல் அல்லது புதுப்பிக்கவில்லை என்றால் அல்லது ரத்து செய்தால் நிதி உதவி பெற்று கட்டப்பட்ட கட்டிடங்கள் அரசுக்கு சென்று சேரும் என இந்த திருத்த சட்டத்தில் சொல்லி உள்ளனர். மேலும் தொண்டு நிறுவனங்களின் உரிமம் எந்த நேரத்திலும் மத்திய அரசால் திரும்ப எடுத்து கொள்ள முடியும்.

we-r-hiring

இதன் மூலம் தொண்டு நிறுவனங்கள் நடத்திவரும் பள்ளி கல்லூரி மருத்துவமனை என எதுவாக இருந்தாலும் உரிமம் இல்லை என கூறி அதனை அரசே எடுத்து கொள்ள முடியும் முன்னதாக ED வைத்து மிரட்டி பார்த்தார்கள் இப்போது திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றி உள்ளனர் என தெரிவித்துள்ளாா்.

இந்த தொண்டு நிறுவனங்கள் கிறிஸ்துவர்கள் நடத்தி வருகிறார்கள். அதனால் எப்போது வேண்டுமாலும் அவர்கள் லைசன்ஸ் ரத்து செய்ய முடியும் என்கிற முறையில் கொடூரமான சட்டத்தை கொண்டு வர பார்க்கிறார்கள். துப்பாக்கி முனையில் வீட்டிற்குள் வந்து கொள்ளை அடிப்பது போன்று தான் இந்த சட்டம் உள்ளது எனவும் நிலம் கைப்பற்றும் சட்டத்தில் போதிய கால அவகாசம் இருக்கும். ஆனால் இந்த திருத்தப்பட்ட சட்டத்தில் அப்படி இல்லை அப்படிபட்ட கொடூரமான சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

கிறிஸ்துவர்களின் சொத்துகளை பிடுங்க பார்பது எதனால் என்றால் அதனால் பயன்பெற்றவர்கள் அதிகம். அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனம் மூலம் இன்று நல்ல இடத்திற்கு சென்றவர்கள் ஏராளமாக உள்ளனர். ஆதரவற்றோர்க்கு நடத்தும் இல்லத்தில் நிறைய பேர் உள்ளனர்.

பழங்குடியினர் மக்களுக்கு கிறிஸ்துவ அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் பல நன்மைகளை செய்து வருகிறது என கூறினார். இந்த சட்டம் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தொடக்கத்தில் இருந்தே இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார் முதல்வர். இஸ்லாமியர்களுக்கு வக்பு சட்டம் கொண்டு வந்து அவர்களின் சொத்துகளை அடித்து பிடுங்கினார்கள். அதே போல இந்த சட்டத்தை நிறைவேற்றினால் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கும் எனவும் இந்த சட்டத்தை அமல்படுத்தியதும் யார் யார்க்கு லைசன்ஸ் இல்லையே அவர்களது சொத்துகள் ஒன்றிய அரசிடம் போய்விடும் எனவும் தெரிவித்தார். மற்றவர்களிடம் இருத்து எப்படி கொள்ளைஅடிப்பது என நினைத்து கொண்டு இப்படி செய்து வருகிறார்கள்.

கிறிஸ்துவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனத்திடம் என்ன தவறை நீங்கள் பாத்தீர்கள் தேசிய பாதுகாப்பு எனும் பெயரில் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் கூறினார். இந்திய அரசின் சொத்துகள் இந்தியாவில் உள்ள இரண்டு பணக்காரர்களுக்கு தான் போய் கொண்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் தேர்தல் காரணமாக இதை பற்றி விவாதிக்க வில்லை. ஆனால் இதை கொண்டு வந்ததால் எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்ற முடியும்.

கிறிஸ்துவர்களின் தவக்காலத்தில் இதனை செய்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களது அவர்களது எண்ணம் ஜெபத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்த சட்டத்திருத்ததை எதிர்த்து திமுக போராடும் எனவும் வஃகு வாரிய சட்டத்தின் போது அந்த சொத்துகளை அடித்து பிடுக்கினார்கள் எனவும் இப்போது கொண்டு வர உள்ள சட்டமும் அடித்து பிடுங்குவதாக தான் அர்த்தம் எனவும் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் சொத்துகளை பிடுங்க வழி வகை செய்யும் என தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஜன் விஸ்வாஸ் என திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. காஸ்மெட்டிக்ஸ் சட்ட பிரிவில் பயனாளர் பாதிக்கப்படும் நிலையில் அப்போது சிறை தண்டனை இருந்தது ஆனால் இப்போது அபராதம் மட்டுமே என்ற வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளனர். ஒரு face cream பயன்படுத்தும் போது அதில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். ஆனால் தற்போது அதற்கு அபராத தொகை கட்டினால் அவர்கள் மீது எந்த தண்டனையும் இல்லை. ரயில்களில் பெண்கள் செல்லும் பெட்டியில் அவதூறாக நடந்து கொள்ளும் நபர்களுக்கு அபராத தொகை மட்டுமே அவர்களுக்கு தண்டனை கிடையாது.

மேலும் நெடுஞ்சாலைகளை மறித்தால் அபராத தொகை மட்டுமே செலுத்தினால் போதும் அவர்களுக்கு தண்டனை கிடையாது எனவும் 80 சட்டங்களில் இது போன்ற புரிதல் இல்லாமல் வெறும் அபராதம் மட்டும் போதும் எனும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.

இந்த சட்டதிருத்தம் பெரு நிறுவனங்களின் முதலாளிகளுக்கு தான் ஆதரவாகவும் பயன்உள்ளதாகவும் இருக்கும் எனவும் அவர்கள் செய்யும் குற்றச்செயல்களுக்கு அபராதம் மட்டும் செலுத்திவிட்டு சென்றுவிடும் வகையில் சட்டத்திருத்தை கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

 

MUST READ