(செப்டம்பர் 29) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்துக் கொண்டே செல்கின்றது. இதனால் நடுத்தர வா்க்கத்தினரும், இல்லத்தரசிகளும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனா். இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்றைய ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ஒரு கிராம் ரூ.10,700க்கும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கத்தின் விலைத்தான் உயருகின்றது என்று பாா்த்தால் வெள்ளியின் விலையும் உயா்ந்துக் கொண்டே செல்கின்றது. சில்லறை வணிகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.160க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறையையொட்டி கவியருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…
