spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைரூ.52 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

ரூ.52 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

-

- Advertisement -

 

ரூ.52 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
ரூ.52 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை , ஏமாற்றம் அடைந்து வரும்  நகை பிரியர்கள்.

we-r-hiring

பட்ஜெட் காரணமாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

அதனை தொடர்ந்து ஆகஸ்ட் -ல் இருந்து தங்கம் விலை உயர்ந்த நிலையில் இருந்து வருகிறது.

இன்று ஆகஸ்ட் 13-ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.6565க்கும் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.52,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.104 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7162க்கும், சவரனுக்கு ரூ.832 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,296க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த விஷயத்தை மறைமுகமாக சொல்கிறது…..’போட்’ படம் குறித்து நடிகர் சிவகுமார்!

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.78 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5378க்கும், சவரனுக்கு ரூ.624 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,024க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.88.50க்கும் ஒரு கிலோ ரூ.88,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ