ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஆகஸ்ட் 7ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 , சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன் படி இன்று (ஆகஸ்ட் 8) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6350 க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பூஜையுடன் தொடங்கப்பட்ட யாஷின் ‘டாக்ஸிக்’…. வைரலாகும் புகைப்படங்கள்!
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 17 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5202க்கும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 41 ,616 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றை வெள்ளி நிலவரம் , வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.86.50-க்கும் , ஒருகிலோ 86500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.