Homeசெய்திகள்சென்னைஆளுநர் ஆர்.என்.ரவி - போதைப் பொருள் அச்சத்தை உறுதியாகியுள்ளது

ஆளுநர் ஆர்.என்.ரவி – போதைப் பொருள் அச்சத்தை உறுதியாகியுள்ளது

-

- Advertisement -

கிழக்கு ஆசியா, ஆப்கானிஸ்தானின் கடத்தி வரப்படும் போதை பொருட்களின் சின்டிகேட் தமிழகத்திலும் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி - போதைப் பொருள் அச்சத்தை உறுதியாகியுள்ளதுபோதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த  நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவ கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,  நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் நாட்டின் நாளைய பெண் தலைவர்களை என் முன்னாள் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். நாட்டின் எதிர்காலமாக பெண்கள் இருப்பதாகவும், எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர் என்றார்.

போதைப் பொருட்கள் தனி மனிதனை சீரழிப்பதோடு, அவனது குடும்பத்தையும் நாட்டையும் சீரழிக்க கூடிய வகையில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆளுநர் கூறினார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து டன் கணக்கில் கடத்தப்படும் போதை பொருட்களை தமிழகம், கேரளா கடலோர பகுதிகளில் பறிமுதல் செய்யப்படுவதாகவும், இதற்கான சின்டிக்கேட் தமிழ்நாட்டிலும் உள்ளதாக கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கு வளர்ச்சிக்கான என்ஜினாக தமிழகம் விளங்குவதாகவும் இங்கு கஞ்சா தடை செய்யப்பட்டு இருப்பதையும் சுட்டி காட்டினார்.

குழந்தைகள் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இதனால் இதுபோன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்வதால் தான் குழந்தைகளிடம் நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறினால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கண்டிப்பாக குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்று போதைப் பொருட்கள் பல்வேறு வடிவங்களில் இருப்பதாகவும் அதன் தேவை உருவாகுவதன் காரணமாக மிகப்பெரிய வணிகமாக உலக அளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். போதை பொருட்கள பிரச்சனை என்பது எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அது மிகப்பெரிய பிரச்சனை. நாம் போதை பொருள் புழக்கத்தை குறைக்க நினைக்க கூடாது. அதை முற்றிலும் வெளியேற்ற வேண்டும் என்றார்.

அதில் Choose life not drug என்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றது. மேலும், போதைப் பொருட்கள் தடுப்பு உறுதிமொழியை ஆளுநர் முன்னிலையில் மாணவிகள் எடுத்துக்கொண்டனர்.  இதை தொடர்ந்து போதை பொருட்கள் விழிப்புணர்வு நாடகத்தையும் மாணவிகள் அரங்கேற்றினா்.

MUST READ