சென்னை பெரம்பூரில் பள்ளிச் சிறுமி தண்ணீர் டேங்கர் லாரியில் அடிபட்டு நேற்று உயிரிழந்தாா். இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடைவிதித்துள்ளாா்.சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தனது தாயுடன் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுமி சௌமியா நேற்று குடிநீர் ஒப்பந்த லாரி ஒன்று மோதி சம்பவ இடத்தில் இறந்தாா். இச்சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பள்ளி வேலை நேரத்தில் செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகள் உட்பட கனரக வாகனங்களை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக் கூடாது. காலை 7 மணி முதல் 12 வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடை மீறி செல்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
