spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசாலைப் பணிகளை விரைந்து முடிக்கும் நெடுஞ்சாலைத் துறை... நிலம் கையெடுப்பு பணிகளில் தீவிரம்…

சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும் நெடுஞ்சாலைத் துறை… நிலம் கையெடுப்பு பணிகளில் தீவிரம்…

-

- Advertisement -

ஓ.எம்.ஆர் – ஈ.சி.ஆர் இணைப்பு சாலை நில எடுப்பு பணிக்காக திருத்திய நிர்வாக ஒப்புதல் மதிப்பீடாக 264 கோடியே 24 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சாலையிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வரை 18 கோடி 25 செலவில் பணிகள் நிறைவடைந்த நிலையில், நிலம் கையெடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளது.சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும் நெடுஞ்சாலைத் துறை... நிலம் கையெடுப்பு பணிகளில் தீவிரம்… ஓ.எம்.ஆர் – ஈ.சி.ஆர் இணைப்பு சாலைக்கான நில எடுப்பு பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தீவிரப்படுத்தி உள்ளது. போக்குவரத்து நெரிசலோடு பல மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை மாறுவதற்கு  இணைப்புச் சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

சென்னையின் வளர்ச்சியில் கிழக்கு கடற்கரை சாலையும், ஓ.எம்.ஆர் சாலையும் முக்கிய பங்காற்று வருகிறது. மாமல்லபுரம், பாண்டிச்சேரி, சிதம்பரம் செல்வதற்கான பிரதான சாலையாக கிழக்கு கடற்கரை சாலை  அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களும், ஐடி அலுவலகங்களும் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது.சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும் நெடுஞ்சாலைத் துறை... நிலம் கையெடுப்பு பணிகளில் தீவிரம்… இதே போல பழைய மகாபலிபுரம் சாலையான ஓ.எம்.ஆர் சாலை பகுதிகளிலும் ஐடி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களின் மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள நிறுவனங்களுக்கு நகரின் உட்பகுதியில் இருந்து பல மணி நேரம் பயணப்பட்டு ஓ.எம்.ஆர் சாலைக்கு வருவதும், இதேபோல கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்வருடைய எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது.

we-r-hiring

அடையாறு வழியாக கிழக்கு கடற்கரை சாலை செல்ல வேண்டுமென்றால் திருவான்மியூர் வழியாக செல்லலாம். மற்றொருபுறம் குரோம்பேட்டை, ரேடியல் சாலை துரைப்பாக்கம் வழியாக வருபவர்கள் பழைய மகாபலிபுரம் சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று கிழக்கு கடற்கரை சாலை செல்ல முடியும். பணிக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை மாலை பொழுதுகளில் செல்லும் பொழுது ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த திருவான்மியூர், சோழிங்கநல்லூர் வழியாக செல்லும் பொழுது காலதாமதம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும் நெடுஞ்சாலைத் துறை... நிலம் கையெடுப்பு பணிகளில் தீவிரம்… இதனால் வேளச்சேரி குரோம்பேட்டை மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக் கூடியவர்கள் துரைப்பாக்கம் வழியாக ஓ.எம்.ஆர் வந்த பின்பு கிழக்கு கடற்கரை சாலை செல்வதற்கான இணைப்பு பாதை உருவாக்கப்பட்டால் பயண நேரம் குறைவதோடு விரைவாக செல்ல முடியும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையை பொறுத்தவரை ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் திட்டத்திற்கு 204 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பக்கிங்காம் கால்வாய் வரை ஆறு வழிச்சாலை இணைப்பதற்கு 18 கோடியே 25 லட்ச ரூபாய் செலவில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பக்கிங்காம் கால்வாயில் குறுக்கே பாலம் கட்டுவதற்கு இந்திய உள்நாட்டு நீர் வழிகள் ஆணையத்திடம் தடையின்மை சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது. மேலும் நீர்வளத் துறையிடம் தடையின்மை சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திடமும் அனுமதி கூறப்பட்டிருக்கிறது.சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும் நெடுஞ்சாலைத் துறை... நிலம் கையெடுப்பு பணிகளில் தீவிரம்… பக்கிங்காம் கால்வாயின் கரைப்பகுதியில் உள்ள 63 ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நீர்வளத் துறையிடம் கேட்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் திட்டங்களால் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக வீடு ஒதுக்கீடு செய்வதற்கும் சுமார் 4 கோடி ரூபாய் வழங்க நெடுஞ்சாலைத்துறை இடம் கோரிக்கையும் முன் வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் கட்டமாக ஆறு வழிச்சாலை பணியை தொடர்பான நிலை எடுப்பு பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நில எடுப்பு பணிக்காக திருத்திய நிர்வாக ஒப்புதல் மதிப்பீடாக 264 கோடியே 24 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ளது. பக்கிங்காம் கால்வாய் குறுக்கே பாலம் கட்டுவதற்காகவும் மற்றும் சாலை பணிகளுக்காகவும் டெண்டரும் கோரப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஓ.எம்.ஆர் – ஈ.சி.ஆர் இணைப்புச் சாலை  போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு பொதுமக்களின் பயண நேரத்தை குறைத்து விரைவாக செல்வதற்கு வழிவகுக்கும் என்பதால் விரைவில் நில எடுப்பு பணிகளை முடித்து, இந்த இணைப்பு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

அனைத்து சாதியினரும் உபயதாரர்களாகலாம் – நீதிமன்ற தீர்ப்பு

MUST READ