Homeசெய்திகள்சென்னைவிடியலை கண்ட கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள் - குடியிருப்பு ஆணைகளை வழங்கிய உதயநிதி

விடியலை கண்ட கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள் – குடியிருப்பு ஆணைகளை வழங்கிய உதயநிதி

-

- Advertisement -

விடியலை கண்ட கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள் - குடியிருப்பு ஆணைகளை வழங்கிய உதயநிதி22 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த வீட்டுக்கு குடிபெயரும் கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள்

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட கண்ணப்பர் திடலில் வீடற்றோருக்கான காப்பகத்தில் 22 ஆண்டுகளாக வசித்து வந்த 114 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்
மூலக்கொத்தளம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதிஸ்டாலின் குடியிருப்புகளுக்கான ஆணைகளை பயனாளிகளிடம் நேரடியாக வழங்கவுள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒதுக்கப்பட்ட வீட்டிற்காக, 4.27 லட்சம் ரூபாய் தொகையை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டும். இவற்றை தள்ளுபடி செய்து , தங்களுக்கு வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து காத்திருந்தனர். இந்நிலையில், ஒவ்வொரு குடும்பத்திற்குமான மொத்த தொகையில் மூன்றில் இரண்டு பங்கு 2,84,667 ரூபாய்யை சென்னை மாநகராட்சி நிர்வாகமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள 1,43,333 ரூபாய் மட்டும் தவணை முறையில் செலுத்த பயனாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து குடும்பங்களுக்கும் குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கஉள்ளார்.

MUST READ