spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபொது மக்களுக்கான நீர்மோர் பந்தல் - பூவிருந்தவல்லி

பொது மக்களுக்கான நீர்மோர் பந்தல் – பூவிருந்தவல்லி

-

- Advertisement -

சென்னை அருகே பூவிருந்தவல்லியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலில் பழச்சாறு, மோர், வெள்ளரிகாய், தர்பூசணி, இளநீரை ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர்.

கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தேவையின் அடிப்படையில் பொது இடங்களில் நீர்மோர் பந்தல் திறந்திட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லி, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, திருமழிசை, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பல நகரங்களில் இன்று அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

பொது மக்களுக்கான நீர்மோர் பந்தல் - பூவிருந்தவல்லி

we-r-hiring

அ.தி.மு.க., நகரச் செயலர் ரவிச்சந்திரன் பூவிருந்தவல்லியில் நீர் மோர் பந்தலை ஏற்பாடு செய்தார். நீர் மோர் பந்தலை துவக்கி வைக்க முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண் டார். அப்போது ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு பழச்சாறு, மோர், இளநீர், தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார்.

பொது மக்களுக்கான நீர்மோர் பந்தல் - பூவிருந்தவல்லி

நிகழ்ச்சி குமணன்சாவடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றதால் கட்சியினர் மட்டுமின்றி பேருந்து பயணிகளும் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். ஒரு கட்டத்தில் நீர் மோர் பந்தலை திறந்து விட்டு முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சென்றுவிட்டனர். அப்போது பந்தலில் தொங்கவிடப்பட்டிருந்த நுங்கு கோலைகளை சிலர் மட்டும் மொத்தமாக பைக், சைக்கிள் கேரியர்களில் எடுத்துச் சென்ற காட்சி எல்லோரையும் சிரிக்க வைத்தது.

MUST READ