spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகொளத்தூரில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி…

கொளத்தூரில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி…

-

- Advertisement -

சென்னை, கொளத்தூர் அருகே விஷ வாயு தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தும், இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொளத்தூரில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி…

கொளத்தூர் அருகே பாலாஜி நகரை அடுத்த திருப்பதி நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் ஈடுபட்ட குப்பன் என்ற தொழிலாளி கழிவுநீர்க் கால்வாய்க்குள் வேலைக்காக இறங்கியபோது, உள்ளே இருந்த விஷ வாயு தாக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளாா்.

we-r-hiring

அவரைக் காப்பாற்றுவதற்காக, சங்கர் மற்றும் ஹரி என்ற  இரண்டு நபர்களும் கால்வாய்க்குள் இறங்கினர். ஆனால் அவர்களுக்கும் விஷ வாயுவின் தாக்கம் ஏற்பட்டதால், உடனடியாக அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷ வாயு தாக்கி உயிரிழந்தது குறித்து போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய்-ஐ புடிச்சி உள்ளே போடுங்க! பனையூருக்கு விரையும் அதிகாரிகள்! அய்யநாதன் நேர்காணல்!

MUST READ